Wednesday, April 23, 2025

பாற்பாடகம்

 *தினம் ஒரு மூலிகை *


 மனப்பாங்கான இடங்களில் தானே வளரும் மிக சிறு செடியினும் மிக மென்மையான பல கிளைகளை உடையது நீரை சேர்த்து கசக்கினால் வழுவழுப்பான சாறு வரும் செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது வியர்வை பெருக்குதல் நோய் நீக்கி உடல் தேற்றுதல் ஜுரம் போக்குதல் முறை நோய் அகற்றுதல் ஆகிய குணம் உடையது பாலில் அரைத்து தடவி குளித்து வர கண் பிரகாசிக்கும் உடல் நாற்றம் நீங்கும் சூடு தணியும் பார்பாடகம் கண்டங்கத்தரி ஆடாதோடை சுக்கு விஷ்ணுகாந்தி வகைக்கு 40 கிராம் இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 250 மில்லியாக காய்ச்சி தினம் 4 வேளை ஐம்பது மில்லியாக மூன்று நாள் கொடுக்க ஜுரம் போகும் இதனுடன் நிலவேம்பு சுக்கு சீரகம் அதிமதுரம் வகைக்கு 10 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி தினம் 4 வேளை 50 மில்லியாக மூன்று நாள் கொடுக்க ஜுரம் தீரும் மற்றும் அதிமதுரம் பேய்ப்புடல் சீந்தில் கொடி சீந்தில் வேர் கோரைக்கிழங்கு சுக்கு கொத்தமல்லி ஆகியவை வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராக காக்கி வடிகட்டி தேன் கலந்து 30 மில்லியாக 3 வேளை 3 நாள் கொடுக்க எவ்வித காய்ச்சலும் அகலும் நன்றி.

No comments:

Post a Comment