Wednesday, April 2, 2025

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் பெரும்பாலும் நாம், நம் குடும்பம், உறவுகள் போன்ற சிறிய, சம்சார வட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிறோம். 

புலன்களுக்கு சுகத்தை தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது, மனம் அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது.

சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது.

 ‘அது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத் தூண்டுகிறது. 

இந்த ஆசை சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப்

போவதில்லை’ என்ற ஒரு வேகமும் வெறியும் உண்டாகிறது. 

ஆசை பேராசையாக மாறுகிறது.


 அது தடை படும்போதோ, அல்லது கிடைக்காமல் போகும்போதோ அது ஏமாற்றமாக மாறுகிறது. ஏமாற்றம் கோபத்தைத்  தூண்டுகிறது.


கோபம் நம் மனதை இரண்டு வகையில் பாதிக்கிறது.

 முதலில் தெளிவாக யோசிக்கும் திறமையை மூடி மறைக்கிறது 

 அது குழப்பத்தை ஏற்படுகிறது. இதனால் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் (ஆன்மிகம் உட்பட) மறந்து போகின்றன.


இதனால் புத்தி தடுமாறுகிறது. 

சரியான முடிவு எடுக்கமுடியாமல் தவறான பாதையில் சிக்கிக் கொள்கிறோம். 

தெய்வீக சிந்தனை மறந்து போகிறது.


தவறான பாதையில் சிக்கிக் கொண்டபிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பெரிதாகும்போது அவைகளிலிருந்து விடுபடுவது முக்யமாகி, அவைகளுக்கும் விடைதேடுவதே நம் முதல் பணியாகிறது.


இந்த பிரச்னையில் ஆறுதல் கிடைக்க மீண்டும்  ஆன்மிகம் தேடுகிறோம்.

 எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காத போது ஆன்மீகத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை குறைந்து ஏமாற்றம், வெறுப்பு ஏற்படுகிறது.


 ஏமாற்றத்தின் உச்சத்தில் எடுக்கும் மிகப் பெரிய முடிவு கடவுள் மறுப்பு  சிந்தனை , நல்ல வழி நாத்திகம் என்று நம்புவது.

 

நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு என்று இருந்தால் அது ஆன்மிகம் மட்டுமே.


எக்காலத்திலும் தன்னை நாடி வந்தோரை காப்பது இறை சக்தி, தெய்வீக ஆற்றல் மற்றும் பிரபஞ்ச சக்தி மட்டுமே.

இறைவனைத் தொழுவோம். நியாயமாக எண்ணிய, ஆசைப்பட்ட எல்லா வற்றையும்  பரிபூரணமாக அடைவோம்.


#வாழ்த்துகள்.


#வாழ்க_வளத்துடன்.

No comments:

Post a Comment