🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫
வாழ்க்கையில் எந்த காரணமும் இல்லாமல் நாம் அனுபவிக்கும் துயரங்களுக்கு பட்டினத்தார் கூறும் காரணம்
தான் செய்யாத திருட்டுக்காக மன்னனால் தண்டனை அறிவிக்கப் பட்டு பட்டினத்தார் கழுவேற்ற பட இருந்த பொழுது அவர் பாடிய பாடல். இந்த பாடலுக்கு பின் அந்த கழு மரமே தீ பற்றி எரிந்து விட அதை பார்த்து அதிர்ச்சி
அடைந்த மன்னர் பத்ரகிரியார் துறவரம்பூண்டு பட்டினத்தாருக்கு சீடராகியதாக கூறுப் படுகிறது.நம் வாழ்க்கையில் எதிர்பாராத வலி வேதனைகளை அனுபவித்தால் அது நாம் முன் செய்த வினையின் பயன் ( கர்மா ) என்று நாம் ஏற்றுகொள்ள வேண்டும். அது குறித்து இறையாற்றலிடம் நம்மை ஒப்புவித்தல் வேண்டும் என்பதையே இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. இந்த ஏற்றுக்கொள்ளல் ஒரு வகை விடுதலை.
ஏனெனில் அந்த ஏற்றுக்கொள்ளல் இல்லாத பொழுது நாம் ஏன் இந்த வாழ்க்கையில் காரணமே இல்லாமல் தண்டனைகளை அனுபவிக்கிறோம் என்று எண்ணி எண்ணி கவலை மட்டுமே படமுடியும். தீர்வு என்று எதுவும் கிடைக்காது. தீராத பயமும் வாழ்கை மீது வெறுமையும் வந்து சேரும். அதுவே இது நம் முன்வினை என்று ஏற்றுக்கொண்டால் நாம் அதை கடந்து செல்ல எளிமையாக இருக்கும்.
ஏற்கனவே பல முறை கூறியது போல் ஆன்மிகம் என்பதும் இறையாற்றல் என்பதும் எந்த பிரச்சனையையும் நமக்கு வராமல் தடுப்பது அல்ல.எந்த பிரச்சனை வந்தாலும் மனம் தளராமல் அவற்றை தாங்கும் வல்லமையை நமக்கு அளிப்பதே ஆகும்.
கடவுளுக்கு தெரியும் நம்மை எப்படி வழி நடத்த வேண்டும் என்று. இறைவன் / இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நமக்கு வரும் பிரச்சினை நம் கண்ணுக்கு தெரியாது.
🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫
No comments:
Post a Comment