*ராகுல் சாங்கிருத்தியாயன்.*
✍ இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படுபவரும், மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sankrityayan) 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் அசம்கர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே.
✍ இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய 'வோல்கா சே கங்கா' நூல் வேதகாலத்திற்கு
முந்தைய நாட்களிலிருந்து 1944ஆம் ஆண்டு வரையிலான காலக்கண்ணாடி ஆகும். இந்த வரலாற்றுப் புனைவு நூல் மொத்தம் 14 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.✍ இவர் புத்த துறவியாக மாறிய பிறகு தன் பெயரை ராகுல் சாங்கிருத்தியாயன் என்று மாற்றிக்கொண்டார். இவர் முறைப்படி கல்வி எதுவும் கற்கவில்லை என்றாலும் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராக நியமித்தது.
✍ இவர் சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண் விருது, மகாபண்டிட் உள்ளிட்ட பல பட்டங்களையும் பெற்றுள்ளார். மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது, சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.
✍ அறிவுக்கடல், தத்துவஞானி, மகாபண்டிதர் என்று போற்றப்படும் ராகுல் சாங்கிருத்தியாயன் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.
*சரண் ராணி பாக்லீவால்.*
🎶 இந்துஸ்தானி சங்கீத மேதையும், புகழ்பெற்ற சரோட் வாத்தியக் கலைஞருமான சரண் ராணி பாக்லீவால் (Sharan Rani Backliwal) 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார்.
🎶 1930ஆம் ஆண்டு முதல் மேடை கச்சேரிகளில் சரோட் வாசிக்க ஆரம்பித்தார். ஆண்கள் மட்டுமே வாசித்த சரோட் இசையில் இவரும் வல்லமை பெற்றார். இசைக்கலைஞர் என்ற வகையில் உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் இவர்தான்.
🎶 இவர் இந்திய பாரம்பரியத்தை நிலைப்படுத்துவதற்காக அரிதான 450 வாத்தியங்களை சேகரித்து அதை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
🎶 இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தேசிய கலைஞர், சாகித்ய கலா பரிஷத் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 'இந்தியாவின் கலாச்சார தூதர்' என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்டவர்.
🎶 'சரோட் ராணி' என போற்றப்பட்ட இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.
*கிரிகோரி குட்வின் பிங்கஸ்.*
💊 அமெரிக்க உயிரியலறிஞர் கிரிகோரி குட்வின் பிங்கஸ் 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
💊 வாய்வழியான கருத்தடை மாத்திரை கண்டறிவதற்கான தீவிர ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும், முயற்சிகளையும் செலவழித்த ஒரே விஞ்ஞானி என்ற பெருமை பெற்றார்.
💊 கிரிகோரி பிங்கஸ் 250 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி 1967ஆம் ஆண்டு மறைந்தார்.
No comments:
Post a Comment