Saturday, April 19, 2025

🌹 இன்றைய நாளில் பிறந்தவர்.* (19-ஏப்)

 *

*அஞ்சு பாபி ஜார்ஜ்.*

🏅 இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கேரளாவில் உள்ள சங்கனாச்சேரில் பிறந்தார்.

🏅 இவர் 2003ஆம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.


🏅 மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் பதக்கம்

வென்ற முதல் இந்திய தடகள வீரர் 'ஆவார்.


🏅 2003-04ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.



*முகேஷ் அம்பானி.*


இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவரான முகேஷ் அம்பானி அவர்கள், 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.


✍ 'ரிலையன்ஸ்' என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்குள்ளது.


✍ இவர், ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார்.


✍ அதுமட்டுமல்லாமல், இவர் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்குகிறார்.



*குஸ்டாவ் தியடோர் ஃபெக்னர்.*


👨‍🔬 உளவியற்பியலை உலகுக்கு தந்த குஸ்டாவ் தியடோர் ஃபெக்னர் (Gustav Theodor Fechner) 1801ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.


👨‍🔬 நிறம், பார்வை குறித்து 1839-ல் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இவருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.


👨‍🔬 இவரது பார்வை குணமான பிறகு மனதிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.


👨‍🔬 'உணர்வின் தீவிரம் எண்கணிதத் தொடரில் (Arithmetical Progression) அதிகரித்தால், அதைத் தூண்டும் ஆற்றல் பெருக்குத் தொடரில் (Geometrical Progression) அதிகரிக்க வேண்டும்' என்றார்.


👨‍🔬 இந்த ஆராய்ச்சியின் விளைவாக உலகப் புகழ்பெற்ற வெபர்-ஃபெக்னர் விதி (Weber-Fechner Law) பிறந்தது.


👨‍🔬 இயற்பியலிலும், வேதியியலிலும் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் நவம்பர் 18ஆம் நாள் 1887ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Post a Comment