Monday, November 13, 2023

வடாம் உலர்த்தும்போது காக்காவை ஏன் குச்சியால விரட்டறீங்க?

 ``காலேஜ் இன்டவியூ, ஜாப் இன்டர்வியூ, புரமோஷன் இன்டர்வியூனு எல்லாதையும் சக்சஸ்ஃபுல்லா ஃபேஸ் பண்ணி, இப்போ நல்ல போஸ்ட்ல இருக்கிறவள் நான். ஆனா, என் 5 வயது சுட்டிப் பையன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம சிலசமயம் திருதிரு'னு விழிக்கிறேன்'' என்று சுவையான அறிமுகம் கொடுத்துக்கொண்ட நம் வாசகி ஒருவர், நம்முடன் பரிந்துகொண்ட ஒரு சம்பவம்...


`
ஒருநாள் காலையில் 'பசிக்குதுமா' என்றான் என் மகன். ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுடா செல்லம்... காக்காவுக்கு சாதம் வெச்சுட்டு வந்துடறேன்' என்றேன்.

'காக்கா எதுக்கு நமக்கு முன்னாடி சாப்பிடணும்' என்று அவன் கேட்டதற்கு, 'நம்ம பித்ருக்கள்... அதாவது கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா மாதிரி நம்ம பரம்பரையில் நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்க, காக்கா வடிவத்துல வந்து நாம வைக்கிற சாதத்தை சாப்பிடுவாங்க என்பது ஐதீகம். அவங்களுக்கு சாப்பாடு வெச்சிட்டு நாம சாப்பிடறதுதான் மரியாதை'' என்றேன்.

இதைக் கேட்டு சமர்த்தாக தலையாட்டியவன், ஒரு நிமிட மவுனத்துக்குப் பிறகு கேட்டானே ஒரு கேள்வி... 
அப்படீன்னா, வடாம் உலர்த்தும்போது காக்காவை ஏன் குச்சியால விரட்டறீங்க?!' "

No comments:

Post a Comment