Wednesday, November 22, 2023

பிரச்சனை இவ்வளவா?இவ்ளோதானா?


ஒரு தந்தையிடம் மகன் தனக்கு ஏதேனும் ஒரு துன்பமோ அல்லது மனக்கவலையோ ஏற்படும் போது வந்து கலங்கி நிற்பான். 

அப்போது அவனது பிரச்சனையைக் கேட்ட பின் தந்தை ஒரே வார்த்தையில் இவ்ளோதானா? உன் பிரச்சனை எல்லாம் சரியாகிடும் என்பார்.

அவனுக்கும் சில நாட்களில் அந்த பிரச்சனையோ துன்பமோ இல்லாது போய்விடும். அந்த மகனும் வளர்ந்தான். தந்தைக்கும் வயதானது அவரது மகன் தற்போதெல்லாம் எந்த பிரச்சனை வந்தாலும் தந்தையிடம் சிரித்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தான். 

ஒரு நாள் மகன் தந்தையிடம் கேட்டான் "ஏம்பா நான் எவ்ளோ பெரிய பிரச்சனைனு வந்தாலும் இவ்ளோதானா? அப்படினு கேட்கிற எனக்கும் அந்த பிரச்சனை சுலபமா முடிஞ்சுடுதே எப்படிப்பா?" என்றான்.


அந்த தந்தை சிரித்துக் கொண்டே சொன்னார் " சில வருடங்களுக்கு முன்னாடி பிரச்சனைனா கண்கலங்குவ. நீ கலங்கும் போது அந்த பிரச்சனையை எப்படி தீர்க்குறதுன்றது உனக்கு தெரியாம இருக்கும் நான் இவ்ளோ தானா? அப்படினு கேட்டதும் உன் மனம் இது ஒரு பிரச்சனையே இல்லைனு ஒரு முடிவுக்கு வந்து அந்த பிரச்சனையும் முடிஞ்சுடும். 

இப்போ எவ்ளோ பெரிய பிரச்சனை உன் முன்னாடி இருந்தாலும் அதற்கான தீர்வு மட்டும் தான் உனக்கு தெரியும். சின்ன வயசில எனக்கு ஏதாவது பிரச்சனைனா என்னை பயமுறுத்த ஆள் இருந்தாங்களே தவிர தைரியம் சொல்ல ஆள் ரொம்ப கம்மியா இருந்தாங்க. அதனால தான் நான் எப்பவும் உன்கிட்ட எந்த பிரச்சனைனாலும் இவ்ளோதானானு கேட்பேன்" அப்படினு சொன்னார்.


நாம எவ்ளோ புத்திசாலியா இருந்தாலும் ஒரு நிமிடம் இவ்வளவா? அப்படினு நினைச்சா நாம அங்கேயே நின்னுடுவோம். ஆனா இவ்ளோதானா? அப்படினு நினைச்சா அதை தாண்டி அடுத்த கட்டத்துக்கு போய்டுவோம்.

No comments:

Post a Comment