Monday, November 13, 2023

குருவிடம் சீடனாக விரும்பிய ஒருவன்

 குருவிடம் சீடனாக விரும்பிய ஒருவன் தொடர்ந்து அவரை வந்து சந்திக்கிறான். தன் பலத்தால் நூறு பேரை வீழ்த்தும் சக்தியுடைய அவனை குரு பயிற்சிக்கு சேர்த்துக்கொள்கிறார்.


மாதங்கள் கழிகின்றன. பலமாத பயிற்சிக்குபிறகு குரு எதேச்சையாக சீடனை அழைத்து “இப்போது உன் சக்தியை சோதிக்கிறேன்.. எத்தனை பேரை நீ வீழ்த்த முடியும்“ என்று கேட்கிறார்.

பயிற்சிக்கு முன்பு நூறு பேரை வீழ்த்துவேன் என்று கூறிய அவன் பயிற்சிக்குப்பிறகு ‌ஐம்பது பேரை மட்டுமே வீழ்த்த முடியும் என்கிறான்..

பிறகும் சில மாதங்கள் கழிகின்றன. மறுபடியும் குரு சீடனை அழைத்து சக்தியை சோதனை நடத்த, அதே கேள்வியைக் கேட்கிறார். இப்போது உன்னால் எத்தனை பேரை வீழ்த்த முடியும்?

சீடன் பணிந்த கண்களோடு சொன்னான்.. “குருவே, இதை நானெப்படி சொல்ல முடியும்..? என் பலத்தை எதிரிகள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்“ என்கிறான்.

புன்னகைத்த குரு, சீடனை ஆசீர்வதித்து பயிற்சி முடிந்தது. வீட்டுக்கு போகலாம் என்று வழியனுப்பி வைக்கிறார்.

இக்கதை ‌போல்தான் நமது வாழ்வும், சாதாரணமான தேவைகளை தீர்மானிக்கும் போது கூட அது சராசரி நடைமுறைக்கு ஒத்துவருகிறதா எனப்பார்க்க வேண்டும். ஏனெனில், நம்முடைய பலம் எதிரே இருப்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது

No comments:

Post a Comment