Tuesday, December 23, 2025

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*

 

23.12.2025 (செவ்வாய்க்கிழமை)

🌹ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக் கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல. அன்பு, அமைதி, நிம்மதி இவைகளை பெற்ற மனிதனிடம் உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.!

🌹🌹வீடு அழகாக இருக்க வீட்டை தினமும் சுத்தம் செய்கிறோம். வாழ்க்கை சிறப்பாக இருக்க உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.!!

🌹🌹🌹மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பல ஏமாற்றங்களைத் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🍒🍒டிசம்பர் 23,

இந்திய விவசாயிகள் தினம்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். இந்தியாவில் இன்றும் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.

🍒🍒டிசம்பர் 23, 1954

உலகின் முதன்முதலான மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் செயல்படாமல் போனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி தற்போது தாராளமாக செயல்படுகிறது.

🍒🍒அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.

👉கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்த எந்த வித உத்திரவாதம் இல்லை

👉எனவே திட்டமிட்டபடிஜாக்டோ- ஜியோவின் போராட்டம் தொடரும்

👉நேற்று நடைபெற்ற அரசின் உடனான பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை

👉முதற்கண் இதனை பேச்சுவார்த்தை என்று சொல்ல இயலாது 

👉ஒரு ஆலோசனை கூட்டம் போன்றே நடைபெற்றது

👉மீண்டும் ஒருமுறை அனைத்து சங்க பிரதிநிதி களையும்  கோரிக்கை குறித்து கருத்துக்களைக் கூற அழைத்தார்கள்

👉அதிலும் குறிப்பாக 70-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்ட நிலையில்  38 சங்கங்களே அழைக்கப்பட்டன

👉முக்கிய சங்கங்களை கருத்து கூற அழைக்கவில்லை

👉இறுதியில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் போதிய நிதி நிலையை கருத்தில் கொண்டு தாங்கள் கூறிய கருத்துக்களை முதல்வர் அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் பொங்கலுக்கு முன்பாக அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புவோம் என முடித்துக் கொண்டார்

👉 அரசின் உடனான பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.

👉கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்த எந்த வித உத்திரவாதம் இல்லை

👉எனவே திட்டமிட்டபடிஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடரும்

🍒🍒அமைச்சர்கள் குழுவுடனான பேச்சு வார்த்தை தோல்வி!

👉கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு எவ்வித உத்தரவாதம் தராதது ஏமாற்றமே!!

👉வரும் 27 ஆம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மற்றும் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் திட்டமிட்டபடி நடைபெறும்.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி

🍒🍒JACTTO-GEO PRESS NEWS 22.12.2025 - தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தை பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது . ஏற்கனவே அறிவித்தவாறு ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் - ஜாக்டோ - ஜியோ

🍒🍒"திட்டமிட்டபடி போராட்டம்"

"தமிழக அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உத்தரவாதமும் கிடைக்கவில்லை; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வரை போராட்டம்

ஜனவரி 6 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடைபெறும்"

-போட்டா ஜியோ தலைவர் அமிர்தகுமார் பேட்டி

🍒🍒பள்ளிக்கல்வித் துறை சார்பில் 210.17 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடங்கள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் திறப்பு - செய்தி வெளியீடு - நாள்: 22.12.2025

🍒🍒தமிழ் பண்டிதர் பயிற்சி (TPT) பெற்ற 8 பணிநாடுநர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்க அனுமதித்து அரசாணை வெளியீடு.

🍒🍒டிட்வா’ புயல், கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. பருவத் தேர்வுகள் ஜன.20-ம் தேதி தொடக்கம்

🍒🍒இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

🍒🍒தகவலுக்காக...

பழைய வருமானவரி திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களுடைய வருமானவரி விலக்குக்குரிய ஆவணங்களை களஞ்சியம் செயலியில் 31-12-2025 - க்குள் பதிவேற்றம் செய்யவும்.

🍒🍒குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.

👉828 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

👉குரூப் 2 தேர்வில் 1126 பேரும், குரூப் 2 ஏ தேர்வில் 9,457 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்

தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்

🍒🍒பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை ( டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை 12 நாட்கள் ) தேதிகள் அறிவிப்பு - Half Yearly Exam Holidays - DSE Proceedings வெளியீடு.

🍒🍒அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒ஆசிரியர்களுக்கு RIESI பெங்களூரில் 30 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - DEE Proceedings வெளியீடு.

🍒🍒செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

1,200 செவிலியர்கள் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணி அமர்த்தல். 169 பேருக்கு உடனடி நிரந்தர பணியாணை வழங்க நடவடிக்கை.

750 பேருக்கு புதிய பணியிடங்களை உறுவாக்கி தரப்படும்.

பொங்கலுக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும்”

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

🍒🍒60 அரசுப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் உள்ள 60 அரசுப் பள்ளிகளில் 96.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 ஆய்வகக் கட்டடங்கள், 16 மாணவர்/மாணவியர் கழிப்பறைக் கட்டடங்கள், 8 குடிநீர் வசதிப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

🍒🍒வங்காளதேசத்தில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு அகில இந்திய மருத்துவ மாணவர்கள் சங்கம் கடிதம்

🍒🍒பிரிவினை முயற்சியை ஏற்கமுடியாது 

கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை 

சாதி, மதம் கடந்து கல்வி கற்கும் இடம் பள்ளி, அங்கு பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது என காட்டம்

🍒🍒நீக்கப்பட்ட வாக்காளர்களில் திமுக வாக்காளர்கள் உள்ளார்களா? என பார்க்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக ஒருவர் விடுபட்டிருந்தாலும் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்,

வாக்குச்சாவடி வாரியாக மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

168 தொகுதிகளில் 10%க்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர்;

நாம் வாக்குச்சாவடி வாரியாக கண்காணிக்க வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும்

🍒🍒விண்வெளிக்குச் சென்ற முதல் சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திரனாளி!

முதல்முறையாக விண்வெளிக்குச் சென்ற சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஜெர்மனியைச் சேர்ந்த மிக்கேலா பெந்தாஸ்.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் பணிபுரியும் இவர் Blue Origin ராக்கெட்டில் பயணித்து திரும்பியுள்ளார்

🍒🍒புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு விழாவில் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்வதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்..

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

🍒🍒சென்னையில் வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை நேற்று திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மெரினா அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் 2,400 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள, வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்த 

நேற்று திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை, கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் சென்னை மாநகராட்சி இதனை அமைத்துள்ளது.

சுமார் 80 பேர் ஒரே நேரத்தில் தங்கவும், அவர்களுக்குத் தேவையான பாய், தலையணை மற்றும் போர்வை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன.

🍒🍒விரைவில்...

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும் 

-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

🍒🍒கன்னியாகுமரி - கண்ணாடி பாலம்.

2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 21 வரை, ஒரே ஆண்டுக்குள் 27 லட்சத்து 33 ஆயிரம் சுற்றுலா பயணிகள்,

சுற்றுலா படகுகள் மூலம் கண்ணாடி கூண்டு பாலத்தை நேரில் கண்டு ரசித்துள்ளனர்.

🍒🍒சென்னையில் தங்கம் விலை நேற்று இரண்டு முறை உயர்வு: சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,580க்கு விற்பனை: நகை வாங்குவோர் கலக்கம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்திருந்த நிலையில் பிற்பகல் ரூ.720 உயர்ந்துள்ளது.நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.95,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த திங்கட்கிழமை ரூ.99,000-ஐ தாண்டியது. அதன்பிறகு அடுத்தடுத்த தேதிகளில் ரூ.1,00,000 ஆகவும், அடுத்த நாள் ரூ.1,00,040 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.

🍒🍒நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த பொருநை அருங்காட்சியகத்தில் 

இன்று (டிச. 23) முதல் பொதுமக்களுக்கு அனுமதி

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். பெரியோருக்கு ரூ.30, சிறார்களுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயம்_

பள்ளி மாணவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவர்களுக்கு ரூ.50 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படும்_

அருங்காட்சியகத்தின் உள்ள இருக்கும் 5D திரையரங்கிற்குச் செல்ல ரூ.25 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்_                                     🍒🍒"விஜயை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை" - சரத்குமார்

🍒🍒ஜனவரி 7ம் தேதி நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை

படுகர் இன மக்களின் ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவு

🍒🍒"விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் நடந்த SIR பணிகளில் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

விடுபட்ட தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்க திமுக பாக முகவர்கள் உதவி செய்வார்கள்”

உதயநிதி, துணை முதலமைச்சர்

🍒🍒வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 கூடி ரூ.231க்கு விற்பனை!

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 கூடி ரூ.231க்கு விற்பனை!

1 கிலோ வெள்ளி ரூ.2.31 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது

🍒🍒ரூ.5,000 வழங்குக!

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் 

எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக வைத்த கோரிக்கையை தான் அதிமுக தற்போது வைக்கிறது 

எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்

🍒🍒முன்பு வாக்காளர்கள் தங்களுக்கான அரசியல்வாதியை தேர்வு செய்தார்கள்

இப்போது அரசியல்வாதிகள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்கிறார்கள்

SIR திருத்தம் குறித்து

சீமான் கருத்து

🍒🍒தவெக சார்பில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் ஆற்காடு நாவப் முகமது அலி பேச்சு!

தமிழ்நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உள்ளது.

பொருளாதாரத்தில் 2வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது

ஒற்றுமைக்கும் மதநல்லிணக்கத்திற்கும் தமிழ்நாடு ஒரு சிறந்த உதாரணம்.

நாங்கள் மனிதர்களை மதிக்கிறோம்

🍒🍒சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவை ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

🍒🍒புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

🍒🍒இலங்கையில், தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: 

ராமதாஸ் வலியுறுத்தல்

🍒🍒தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.

🍒🍒தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்

முதலமைச்சரின் ஆலோசனைகளை பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மாநில உரிமைகளுக்காக போராடுவது உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையின் மையக் கருத்தாக இருக்கும் என்று கூறினார்.

🍒🍒நேர்மைக்கு கவுரவம்

நாகப்பட்டினம் : வண்டிப்பேட்டையில் போஸ்ட்வுமனாக பணிபுரியும் பவித்ரா சாலையில் கிடந்த ரூ.50,000 பணக்கட்டை நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் 

இதே போல கடந்த வாரம் மேலவீதி பகுதியில் கிடந்த 1 சவரன் தோட்டை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். அவரின் இந்த நேர்மையான செயல் பாராட்டுகள் குவித்து வருகிறது

🍒🍒விஜய்யால் தனியாக சாதிக்க முடியாது என்று எச்சரிக்கை கொடுக்கிறேன்; விஜய் அரசியலில் பிழைக்க வேண்டும் என்றால் உழைக்கும் எங்களோடு இருக்க வேண்டும், தனியாக நின்று காணாமல் போய்விடக்கூடாது - தமிழிசை சௌந்தரராஜன்

No comments:

Post a Comment