Thursday, December 7, 2023

இணங்கி நடப்பது என்றால் என்ன?

ஔவையாரின்  மூதுரைப் பாடல் ஒன்று பின்வருமாறு தொடங்கும். "நல்லாரைக் காண்பதுவம் நன்று; அவர் சொல்லை ஒருவன் கேட்பதுவும் நன்று; அவர் குணங்களை ஒருவன் சொல்லுவதும் நன்று; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று" என்கிறார். காண்பது, கேட்பது, உரைப்பது என்னும் செயல்களுக்கு மத்தியில் "இணங்கி இருப்பது" என்ற செயலும்  குறிப்பிடப் பட்டு உள்ளது. 


இதனால், ஒருவரைக் காண்பதும், அவர் சொல்லைக் கேட்பதும், அவரைப் பற்றிச் சொல்லுவதும் செய்த அளவிலேயே அவரோடு இணங்கி விட்டதாக எண்ண முடியாது. 


ஒருவர் கொள்கைப் படி, ஒருவர் நடந்து கொள்ளுவதே "இணங்கி நடப்பது" ஆகும். ஒருவருக்குத் துணை செய்ய வேண்டுமானால், அவரோடு இணக்கம் கொண்டு இருக்க வேண்டுவது இல்லை. அவரைப் பார்ப்பதும், அவர் சொல்லைக் கேட்பதும் போதும். "இணக்கம்" என்பதைச் சொல்லும் செயலும் ஒத்ததாகக் கருதுவதே சிறந்தது. 

No comments:

Post a Comment