Sunday, December 10, 2023

வலிதான் பகை என்ற வன்மத்தை உருவாக்கும்!

ஒருவர் மீது மற்றொவருக்கு தீராப்பகை ஏற்பட பலகாரணங்கள் இருக்கக்கூடும்.
ஆனால் அந்தப் பகையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடுவதில்லை.
இத்தகைய தீராப்பகை எதனாலே ஏற்பட்டது என்று சிந்தித்தால்,
பலரின் முன்பு தன்னை ஒருவன் கேலி செய்த காரணத்தாலும்,
அல்லது பலரின் முன்பு அவமானப் படுத்தப்பட்ட
தாலும்,தனது பணபலத்தால்,
அதிகாரத்திமிரால் தன்னைவிட எவனும் இங்கே தகுதியற்றவன் என்ற நினைப்பால் ஒருவன் ஒதுக்கப்படும் பொழுதும்,
ஒருவனுடைய திறமையை சிலர் சேர்ந்து திறையிட்டு மறைக்கமுயல்வதாலும், தீராப்பகை ஒருவனிடத்திலே தோன்றுகிறது என்பது உண்மை. "பகைவனுக்கும் அருள்வாய்!" என்பது அருளாளர்கள் வாக்கு.
பகைவனையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும்பக்குவத்தை ஞானிகள் மட்டுமே பெற்றுள்ளார்கள். கடைநிலையில் உள்ள மனிதனிடம் அந்தப்பக்குவத்தை யாரும் காணமுடியாது.
அதனால்தான்
மனிதனிடம் ஏற்படும் தீராப்பகைக்கு காரணமாக அமைவது அவனுக்கு பிறரால் தரப்பட்ட வலிகள் என்பதுதான் உண்மை.
மகாபாரதக்கதையில்,
திரௌபதி
துரியோதனனை பார்த்து ஒரு சந்தர்ப்பத்தில் கேலியுடன் சிரித்தாள்.
அதனால் அவமானம் அடைந்தான் துரியோதனன்.
அவன் அடைந்த அவமானத்தால் அவனுக்கு மனதில் ஏற்பட்டதுவலி.அந்த வலியே குருசேத்திரப் போர் தொடங்கக்
காரணம் ஆயிற்று.
பொதுவாகவே மனிதர்களுக்கு ,
வலியை தாங்கிக் கொள்ள வலிமை இருந்தாலும் அந்த வலியை ஏற்படுத்திய வர்கள் மீது வன்மமாகிய பகை பிறக்கத்தான்செய்யும்.எனவே மாற்றாரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றாலும்,
அவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றாலும், தீராப்பகையை உருவாக்கிக்கொள்ள அவர்களை மிதித்து அவமானப்படுத்தாதீர்கள்.
அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க விரும்பாதீர்கள்.





No comments:

Post a Comment