Sunday, December 10, 2023

நாம் நல்லவர்களா?

பெரும்பாலான மனிதர்கள் நாம் நல்லவர்கள் என்ற மாயத்தோற்றத்தில் தான் வாழ்கிறார்கள்.

நம்மால் எந்தக் கெடுதலும் பிறர்க்குச்
செய்யாதபோது நாம் நல்லவர்கள் தானே என்ற நினைப்பு இயற்கையாகவே நமது மனதுக்குள் வந்து விடுகிறது. 

அதனால் ஏற்படுகிற கர்வத்தின் காரணமாக பல முட்டாள்தனங்களை செய்து விடுகிறோம்.
பெரும்பாலான மனிதர்களுக்கு இது போன்ற வியாதி உள்ளது. நாம் மட்டுமே மிகவும் நல்லவர்கள் என்று கற்பனை செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோம்.

நாலுபேர் நம்மை மதிக்க வேண்டும் என்றும்விரும்புகிறோம்பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்று எண்ணிக்
கொள்ளுமாம். அதைப் போலத்தான் முக்கால் வாசி மனிதர்கள் இந்த பூமியில் தாங்கள் நல்லவர்கள் என்ற நினைப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்று நம்மைவிட பிறருக்குத்தான் அதிகம் தெரியும். நாம் என்றுமே பின்னோக்கி பார்ப்பதில்லை.

நமது கர்வத்தால் நமக்கு முன்னால் இருப்பதும் தெரிவதில்லை. நம் கண்களுக்குத் தெரியா மல் எத்தனையோ மனிதர்கள் நம்மால் பாதிக்கப்பட்டிருப் பார்கள்.அவர்கள் பெற்ற அந்த வலியும் வேதனையும் நமக்கு கடைசி வரை தெரியப் போவதில்லை.காரணம் நாம் நம்மையே தவறாகப்புரிந்து வைத்துக்கொண்டு வாழ்கிறோம்.


எனவே நமது அறியாமை நீங்கும்வரை, நம்மை யார் என்று? நாம் உணரப்போவதில்லை.
நான் யார் என்று? தன்னையே கேட்டவர்கள், தம்மை ஒரு நாளும் உயர்ந்தவன், நல்லவன் என்று சொல்லாத அமைதியே வடிவான அருளாளர்கள்.


No comments:

Post a Comment