Saturday, December 9, 2023

யார் இங்கே புத்திசாலி?

நேற்று நான் என் நண்பன் ஒருவனைச்
சந்தித்தேன்.அது சமயம் அவன் ஆச்சரியத்தோடு ஒரு செய்தியைச் சொன்னான்."உனக்கு ஒன்னு தெரியுமா? நம்மோடு பள்ளியிலே படித்தானே முத்துசாமி,
அவன் ஒன்றும் அப்போதே நன்றாகவும் படிக்க மாட்டான்,
புத்திசாலியாகவும் தெரியமாட்டான்.
அவன் கல்லூரிக்குச்
சென்று படிக்கவில்லை.
இப்போது அவனைப்
பார்த்தாலே நீ வியந்து போவாய்!

திருச்சியிலே ஏதோ நான்கு ஐந்து தொழில் செய்கிறானாம்.
நல்ல வசதியாக வாழ்கிறானாம்.மகன் டாக்டராம். காரே இரண்டு மூன்று வைத்திருக்கிறானாம். போனவாரம் ஊருக்கு வந்தவன் என்னைப் பார்த்தபோது சொன்னான்."என்று சொல்லி விட்டு, முத்துசாமி புத்திசாலித் தனமாக பிழைக்கிறான் போல என்றான்.

உடனே நான் சொன்னேன் நாம் எல்லோரும் புத்திசாலியா? இல்லை அறிவாளியா? என்றேன்.அதற்கு அவன் சொன்னான் நாமெல்லாம் படித்துப் பயன் என்ன? புத்திசாலித்தனம் இல்லையே?அதனால் தான் நாமெல்லாம் வசதியாக இல்லை என்றான்.

மனிதர்களில் பலரகங்கள் உண்டு. சிறுகக்கட்டிப் பெருக வாழ்பவர்கள் ஒரு பிரிவினர்.ஊர்ல கல்யாணம்,மார்பிலே சந்தனம்னு என்று பகட்டு வாழ்க்கை வாழும் சிலர் ஒருபுறம் .

வெல்லம் இருக்கும் இடத்தில் ஈக்கள் இருப்பதைப்போல அலையும் ஒட்டுண்ணிகள் மறுபுறம்.சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று நினைத்து படுத்துக் கிடக்கும் கூட்டத்தினர் வேறொரு புறம். 

இவர்களில் யார் புத்திசாலி!ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் இடத்தில் தன்னை புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள்.
ஒன்றுமட்டும் உறுதி, அறிவாளிகள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை!என்பதுதான்.

அறிவாளி தன்னுடைய அறிவால் எதையும் படைப்பவன், புத்திசாலியோ ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக் கொண்டு செயல் படுகிறான்.

அவ்வளவுதான் வேறுபாடு புத்திசாலிக்கும் அறிவாளிக்கும் என்றேன்.

நண்பனோ என்னை ஏதோ சமாதானம் செய்கிறாய் என்று சொல்லிவிட்டுப் போனான்.

No comments:

Post a Comment