Tuesday, December 5, 2023

தினம் ஒரு மூலிகை-ஊமத்தை


தினம் ஒரு மூலிகை* நேற்றைய தொடர்ச்சி *ஊமத்தை*  இலை சாற்றில் பத்து முதல் 15 துளிகள் தயிரில் கலந்து கொடுக்க சிறுநீர் பாதை அழற்சி நீங்கி சீழ் குருதிப் போக்கு நிற்கும் விதையை பசு நெய்யில் அரைத்து மூலமுளையில் பூச அற்று விழும் விதையை தேனில் அரைத்து கொதிக்க வைத்து பூச கட்டிகள் கரையும் வீக்கம் குறையும் வலிக்கும் இடங்களில் தடவி வைக்க வலி நீங்கும் புழுவெட்டினால் முடி கொட்டிய இடங்களில் தடவி வர முடி மீண்டும் முளைக்கும் ஐம்பது கிராம் விதையை ஒன்றிரண்டை இடித்து நான் ஒரு மில்லி எண்ணெய் விட்டு ஏழு நாட்கள் அரைத்து வெயிலில் வைத்து வடிகட்டி எடுத்த எண்ணையை அடிவயிற்றில் தடவ சூதக வயிற்று வலி நீர் தாரை எரிவு ஆகியவை தீரும் முகம் காது கண்ணம் ஆகியவற்றில் தோன்றும் குடைச்சல் ஆகியவை இந்த எண்ணையை தடவுவதால் தீரும் நன்றி.


*தினம் ஒரு மூலிகை* *ஊமத்தை*  இதில் மூன்று வகை உள்ளன வெள்ளை ஊமத்தை கரு ஊமத்தை பொன்னூமத்தை பற்கள் உள்ள அகன்ற இலைகளையும் வாயாக என்ற நீண்ட குழலுமான ஊதுகுழல் வடிவ வெள்ளை மலர்களை உடைய குறும் செடிகள் காய்கள் உருண்டை வடிவில் முள் அடர்ந்து காணப்படும் சாலை ஓரங்களிலும் தரிசுகளிலும் தானே வளர்கின்றன செடியின் எல்லா பாகங்களும் மருத்துவ பயன் உடையவை வாந்தி உண்டாக்குதல் இசிவு அகற்றுதல் துயர் நீக்குதல் மூச்சை உண்டாகுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இலையை உலர்த்தி பொடித்து 50 முதல் 150 மில்லி கிராம் அளவாக உள்ளுக்கு கொடுக்க இரைபெருமல் நீங்கும் இலையை வதைக்கி ஒத்தடம் கொடுப்பதால் கீல்வாதம் கட்டிகளால் ஏற்படும் வலி பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வலி ஆகியவை தனி இலையுடன் சம அளவு அரிசி மாவு சேர்த்து அரைத்து தனலில் கழிப்பதமாய் வேகவைத்து இளம் சூட்டில் பற்று போட மூட்டுகளில் தோன்றும் வீக்கம் கட்டிகளால் ஏற்படும் வலி வெளி மூலம் ஆகியவை தீரும் நரம்பு சிலந்திக்கும் போடலாம் ஐந்து முதல் பத்து துளிகள் தயிரில் கலந்து கொடுக்க சிறுநீர் பாதை அயர்ச்சி நீங்கி சீழ் குருதிப் போக்கு நிற்கும் தொடர்ச்சி நாளை நன்றி

No comments:

Post a Comment