Tuesday, December 5, 2023

காலபைரவரை எவ்வாறு வழிபடுவது?

தேய்பிறை அஷ்டமியில்... 🌟காலபைரவரை எவ்வாறு வழிபடுவது?*

                

*தேய்பிறை அஷ்டமி...  வழிபாடு !!!...*


அஷ்டமி திதி என்பது பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாள்.


*காலபைரவரின் சிறப்புகள் :*


🙏 காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள்.


🙏 அந்தகாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவர் பைரவர். சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார்.


🙏 இவருடைய உடம்பில் நவகிரகங்களும், 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. காலத்தை தாண்டி வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர் காலபைரவர் ஆவார்.


🙏 சனீஸ்வரரின் குரு, பைரவர் என்பதால் பைரவரை வணங்கினால் சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும்.


🙏 ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.


🙏 தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.


*காலபைரவரை வழிபடும் முறை :*


🙏 தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வேண்டினால் தடைகள் தகர்க்கப்பட்டு வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.


🙏 பைரவருக்கு மிளகு கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது மிகவும் சிறப்பானது.


🙏 பைரவருக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொண்டால் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.


*காலபைரவரை வழிபட கிடைக்கும் நன்மைகள் :*


🌟 காலபைரவரை வழிபட்டால் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.


🌟 வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.


🌟 சனியின் தாக்கம் தீரும்.


🌟 வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.


🌟 பணம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

No comments:

Post a Comment