Saturday, December 2, 2023

மனிதன் எதையோ தேடி ஓடுகிறான்!

உலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். 


*சிலர் பணத்தைத் தேடி ஓடுகிறார்கள்*. சிலர் அறிவைத் தேடி ஓடுகிறார்கள்.

சிலர் புது வழியைத் தேடி ஓடுகிறார்கள்.


சிலர் அச்சத்தால் புகழிடத்தைத் தேடி ஓடுகிறார்கள். *சிலர் நிம்மதியைத் தேடி ஓடுகிறார்கள்*. 


இப்படி ஓடுகின்ற மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு எது தேவையோ? அதை நோக்கித் தான் ஓடுகிறார்கள். 


எதை நோக்கி ஓடினாலும் அனைவரும் எதிர் பார்ப்பது பணம் என்ற ஒன்றைத் தான் என்பதை மறந்து விடக் கூடாது. 


ஒவ்வொரு மனிதனும் அடுத்தவனைப் பார்த்து, அவனைப் போல நாமும் திகழ வேண்டும் என்று தான் ஆசைப் படுகிறோம். 


ஒவ்வொரு மனிதனும் நம்மைப் போல் தான் என்று நாம் நினைப்பதில்லை.


மாறாக அவனுக்கு மட்டும் ஏதோ ஒரு தனித்துவம் உள்ளது என்று நம்புகிறோம். 


நம்மைப் போல அவனும் இந்த பூமியில் பிறந்தவன் தானே? அவனை நாம் ஏன் நமது வழி காட்டி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்? அறிவை நோக்கி ஓடியவன் சிறப்பாக வாழ்ந்தான் என்று வரலாறு சொல்லவில்லை.


அதே போல பணத்தை நோக்கி ஓடியவன், பணத்தால் தன் வாழ்க்கையை தக்க வைத்துக் கொண்டான் என்றும் வரலாறு பேசவில்லை. 


எனவே ஒவ்வொரு மனிதனும் ஓட்டத்தை நிறுத்தி நிம்மதியாக வாழ வேண்டுமானால், முதலில் மற்றவனைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். 


வாழ்க்கையில் நமக்கு அடிப்படையான தேவைகள் மூன்று. 


ஒன்று வயிற்றுக்குச் சோறு. 

இரண்டு உறங்குவதற்கு ஒரு இடம். 

மூன்று நோயின்றித்

திகழும் உடம்பு.


இதை விடுத்து தேவையற்றதை நினைத்துக் கொண்டிருந்தால் தேவையற்ற மன அழுத்தமும், உளைச்சலும் தான் நமக்குக் கிடைக்கப் போகும் மிச்சம். 


No comments:

Post a Comment