Sunday, December 17, 2023

பூலாங்கிழங்கு-தினம் ஒரு மூலிகை

 


 *பூலாங்கிழங்கு* அல்லது கிச்சிலி கிழங்கு மஞ்சள் இனத்தைச் சார்ந்த சிறு செடி கிழங்குகள் வெள்ளை நிறமாகவும் மனம் உடையதாகவும் இருக்கும் வெள்ளை மஞ்சள் பூலாங்கிழங்கு எனவும் அழைப்பார்கள் வெள்ளை வில்லைகளாக நறுக்கி உணர்த்திய கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கிழங்கு இலை மருத்துவ பயன் உடையது உடல் வெப்பம் மிகுத்தல் வயிற்று வாயு அகற்றுதல் சளி நீக்குதல் சிறுநீர் பெருக்குதல் உடல் தேற்றுதல் மனம் மூட்டுதல் ஆகிய குணம் உடையது கிழங்கை உலர்த்தி பொடித்து அரை கிராம் அளவாக தேனில் கலந்து கொடுத்து வர தொண்டைக் கட்டு வயிற்று பெருமல் நீர் கோவை காய்ச்சல் ஆகியவை தீரும் கிழங்குடன் அரிசி திப்பிலி இலவங்கம் அதிமதுரம் வகைக்கு 10 கிராம் ஒன்று இரண்டாய் இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு நாளில் ஒன்ற பங்காக காய்ச்சி வடிகட்டி தேன் சேர்த்து வேலைக்கு 50 மில்லியாக குடித்து வர இருமல் தீரும் கிழங்கினை சுவைத்து விழுங்க தொண்டைக் குழலில் தேங்கியுள்ள சளியை அகற்றி குரல் வளம் மிகுக்கும் பச்சை கிழங்கை இடித்து பிழிந்த சாற்றை 10 அல்லது 15 மில்லி அளவாக சிறு குழந்தைகளுக்கு கொடுக்க மலர் பூச்சிகள் வெளியேறும் நன்றி.

No comments:

Post a Comment