Sunday, December 24, 2023

கவலையை தூக்கிச் சுமக்காதீர்கள்!


கவலையே எனக்கு இல்லையென்று ஒரு மனிதனும் சொல்வதில்லை.
ஏதோ ஒரு கவலை அவனை வாட்டிக் கொண்டு இருப்பதாக புலம்புகிறான்.சிலரோ எனக்கு மட்டும், அடுத்து அடுத்து கவலைகள் வந்து கொண்டே இருக்கிறது, ஏன்? என்கிறார்கள்.
கவலைகள் அதிகமாக உள்ள மனிதனோ எந்த கவலையை எப்படி போக்குவது?என்று தெரியாமல் முழிக்கிறேன் என்கிறான்.இன்னும் சிலரோ வாழ்க்கை என்றால் கவலைகள் இருக்கத்தான் செய்யும். அப்படிதான் வாழ்க்கை இருக்கும் என்று ஒரு வரியில் பதில் சொல்லி விட்டுப்போய் விடுவார் கள்.ஆதரவு அற்றோர் விடுதியில் பல குழந்தைகள் தங்கி கல்விகற்றனர்.அந்த விடுதியின் நிர்வாகம் ஒரு அறிவிப்பினை
வெளியிட்டார்கள்.
அதில் தாங்கள் விரும்பினால் சில குழந்தைகளின் சாப்பாட்டிற்கு நிதியுதவி செய்யலாம் என்று இருந்தது.
மொத்தக்குழந்தை களுக்கும் நிதியுதவி கேட்டால் கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ என்ற சந்தேகம் இருந்ததால் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
அதனால் சில குழந்தைகளுக்கு நிதியுதவி கிடைக்க வில்லை.நிதியுதவி பெற்றகுழந்தைகளுக்கு இட்லி பொங்கல் கொடுத்த நிர்வாகம்,
நிதியுதவி கிடைக்காத குழந்தைகளுக்கு சுடுகஞ்சி மட்டுமே கொடுத்தனர்.குழந்தை களுக்கு மத்தியில் என்ன ஏற்றத்தாழ்வு?அந்த குழந்தைகள் செய்த தவறு என்ன?கடவுள்மீது கூட நமக்கு
கோபம் வரும் நிகழ்வு தானே இது!நல்ல சாப்பாடு கிடைக்காத குழந்தைகளுக்கு ஆதங்கம் இருக்கத்
தானே செய்யும்.சில குழந்தைகள் தாங்க முடியாமல் அழுது விடுவார்கள். அதுவே சில குழந்தைகளின் மனதில் கவலையாக இந்த நிகழ்வு தங்கி விடும்.அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும்கூட அந்தக் கவலை அவர்களின் மனதை விட்டு நீங்காது.
கவலைகள் ஆயிரம் மனதில் இருந்தாலும்,
அதையெல்லாம் கடக்க எதிர் நீச்சல் போடத் தான் வேண்டும் என்போர் சிலர்.அது அவ்வளவு எளிதானது அல்ல! இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த வர்கள் மட்டும்தான் மற்றவர்களின் கவலைகள் நீங்குவதற்கு வழி சொல்ல முடியும். அனுபவங்கள் இல்லாமல் ஆறுதல் சொல்லவும் முடியாது ஒருவரையும் தேற்றவும் முடியாது.எனவே யாராக இருந்தாலும் கவலையை தூக்கிச்
சுமக்காதீர்கள். கவலையை ஓரமாக வைத்துவிட்டு முடிந்தவரை நம்மை சூழ்ந்து இருப்போரை மகிழ்ச்சியாக வைக்க முயற்சியுங்கள். நம்மை சார்ந்திருப்போரை மகிழ்ச்சியாக வைக்க முயன்றாலே நம் கவலைகளை
நினைத்து கவலைப்பட நேரம் இருக்காது.

No comments:

Post a Comment