
தேவையான பொருட்கள் -
வெற்றிலை - 6,
கற்பூரவல்லி இலை - 6,
மிளகு - 5,
சீரகம் - 1 சிட்டிகை,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
*செய்முறை -*
வெற்றிலை, கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அதனுடன் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கஷாயம் 1/2 கப் அளவிற்கு கொதித்து வந்ததும் இறக்கி வடித்து குடிக்க வேண்டும்.
இந்த கஷாயத்தை குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகி, சளி, இருமல், தொண்டை வலி அனைத்தைம் போக்கி விடும். நன்றி
No comments:
Post a Comment