Tuesday, December 5, 2023

ஆணை குன்றி-தினம் ஒரு மூலிகை

 

    இவை ஒரு மர வகை சிறகு கூட்டிலைகளையும் சிவப்பு நிற வட்ட வடிவ விதைகளையும் உடையது பவழக்குன்றி எனவும் மஞ்சாடி எனவும் அழைக்கப்படும் இதன் இலை விதை வேர் பட்டை ஆகியவை மருத்துவ பயன் உடையவை இலை பட்டை ஆகியவை வலி நீக்கியாகவும் குருதிப் போக்கு அடக்கியாகவும் செயல்படும் வேர் வாந்தி உண்டாக்கும் இலை அல்லது பட்டையை பத்து மடங்கு நீர் விட்டு நாளில் ஒன்றாய் காய்ச்சி வடிகட்டிய குடிநீர் நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று வேளை 50 மில்லி அளவாக குடித்து வர நாள் பட்ட வாத நோய்கள் மூட்டு பிடிப்புகள் குணமாகும் சிறுநீர் பாதை வழியாகவே ஏற்படும் குருதி கசிவு நிற்கும் நீண்ட நாட்கள் பயன்படுத்த காமம் பெருக்கியாக செயல்படும் விதைகளை ஊறவைத்து அரைத்து கட்டிகளுக்கு பற்று போட அவை சீழகன்று வீக்கம் நீங்கி விரைவில் ஆறும் நன்றி

No comments:

Post a Comment