Wednesday, December 27, 2023

2,99,500 ரூபாயை மீண்டும் அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்

வயதான முதியவர் அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து, "எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார். உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவரிடம்.


"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள். உடனே அந்த முதியவர், ஏனென்று கேட்க, அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன், "இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்றாள் சற்றே கடுமையுடன்..



அந்த முதியவர் , இப்பொழுது அமைதியாக தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து, "தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றார். அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டிலுள்ள பண நிலுவையைப் பார்த்து அதிர்ச்சியானாள்.



அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவரிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் தாத்தா.. உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது. எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை சிறிது நேரம் ஒதுக்கி வர இயலுமா?" என்று மிகப் பணிவோடு பவ்யமாக கேட்டாள்.



உடனே அந்த முதியவர் "இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்..?" என்று கேட்டார். உடனே அந்த பெண், "மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள். உடனே அந்த முதியவர் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டுமென்று கூற,



அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள். அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்.



அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள். சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்களின் சில சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போடக் கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment