Friday, December 22, 2023

குருந்து(அ) காட்டு எலுமிச்சை-தினம் ஒரு மூலிகை


குருந்து(அ) காட்டு எலுமிச்சை கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டை வடிவ காய்களையும் உடைய முள் உள்ள எலுமிச்சை என மரம் காட்டு எலுமிச்சை என்றும் புன எலுமிச்சை என்றும் அழைக்கப்படும் இதன் இலை பழம் மருத்துவ பயன் உடையவை உடல் வெப்ப அகற்றுதல் பசியை தூண்டி வயிற்று வாய்வு அகற்றுதல் ஆகிய குணம் உடையது குருந்தம் பழச்சாறு 20 மில்லியில் 2 கிராம் வெடி உப்பை கரைத்து உடம்பில் தடவி வைத்திருந்து குளிக்க சொறி சிரங்கு ஆகியவை தீரும் 30 மில்லி பழச்சாற்றில் சிறிது ஒப்பிட்டு நீர் கலந்து மாலை தோறும் குடித்து வர வாந்தியுடன் கூடிய வயிற்று வலியும் தலைவலியும் தீரும் பழத்தை தனலில் இட்டு பதமாக வாட்டி பிழிந்த சாறு 30 மில்லியுடன் தேன் கலந்து ஒவ்வொரு தேக்கரண்டி அடிக்கடி கொடுத்து வர இருமல் தீரும் பழத்தோலில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயுடன் சம அளவு விளக்கெண்ணெய் கலந்து பூசி வர ஆண்குறி பெண்குறி ஆகியவற்றில் காணும் வெடிப்பு நமைச்சல் வாத வலி ஆகியவை தீரும் இலையை நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி புண்படை ஆகியவற்றை கழுவி வர அவை அரிப்பு நீங்கி விரைந்து ஆறும் நன்றி

No comments:

Post a Comment