Sunday, December 24, 2023

தினம் ஒரு மூலிகை-குகை கிழங்கு

 


குகை கிழங்கு கூவை கிழங்கு என்று அழைக்கப்படும் இந்த கிழங்கிலிருந்து எடுக்கப்படும் மாவு அரூட்மாவு என்று அழைக்கப்படும் வணிக ரீதியாக தமிழகத்தில் பல இடங்களில் பயிர் செய்யப்படுகிறது மஞ்சள் செடி போல் சிறு செடி கிழங்கு கூர்மை உடையதாக வெள்ளை நிறத்தில் இருக்கும் கிழங்கை அரைத்து நீரில் கலக்கி வடிகட்டி மூன்று மணி நேரம் அசையாது வைத்திருக்க மாவு சத்து அடியில் படிந்திருக்கும் நீரை வடித்து விட்டு மீண்டும் நீர் விட்டு கரைத்து தெளிவு இருக்கவும் இதுபோல் ஏழு முறை சுத்தம் செய்து எடுக்கப்படும் மாவு அரை ரொட்டி மாவு என்று அழைப்பார்கள் மருத்துவ குணம் குளிர்ச்சி உண்டாக்குதல் உடல் உரமாக்குதல் சிறுநீர் பெருக்குதல் செரிமான மின்மை பிரச்சனையை தீர்த்தல் ஆகிய குணங்களை உடையது நான்கு தேக்கரண்டி மாவை ஒரு லிட்டர் நீரில் இட்டு கஞ்சியாக பால் சர்க்கரை சேர்த்து கொடுக்க எளிதில் செரிமானம் ஆகும் எல்லா வயதினருக்கும் கொடுக்கலாம் வயிற்றுப் புண்கள் ஆறும் டைபாய்டு காய்ச்சலின் போது கொடுக்க உகந்தது அடிக்கடி வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும் நன்றி.

No comments:

Post a Comment