==================
1.சித்தரைதை, அமுக்கராசூரணம் 1கிராம் 5-10மிலி தேனில் தினமிருவேளை கொள்ள மூட்டுவலி தீரும்
2. பிண்டத்தைலம் அல்லது வாதகேசரித்தைலம் தடவி வெந்நீரில் ஒற்றடமிட மூட்டுவலி, முதுகுவலி தீரும்
3. நொச்சி,தழுதாழை,
வாதநாராயணன் இலைகளை வேகவைத்து ஒற்றடமிட மூட்டுவலி, வீக்கம் குணமாகும்
4. தழுதாழை இலைகளை வி.எண்ணையில் வதக்கி
கட்ட சுளுக்கு, மூட்டுவலி, குணமாகும்5. தழுதாழை இலைகளை ஆலிவ் எண்ணையில் வதக்கிக்கட்ட விரைவாதம், நெறிக் கட்டிகள், வாதவீக்கம் குணமாகும்
6. வாதநாராயணன் இலைகளை சமைத்துச் சாப்பிட,வி.எண்ணையில் வதக்கி ஒற்றடமிட வாதவலி, வீக்கம்,கட்டிகள் குணமாகும்
7. வாதநாராயணன் இலைச்சாறு 1தேகரண்டி தினம் காலையில் பருகிவர கை,கால் குடைச்சல், வலி குணமாகும்
8. வாதநாராயணன் இலைச்சாறு1லி , மஞ்சள்கரிசாலை,குப்பைமேனி, வெற்றிலை, சாறு வகைக்கு கால்,வேப்பெண்ணை,வி.எண்ணை,ந.எண்ணை வகைக்கு அரைலி, சுக்கு,மிளகு,திப்பிலி , சீரகம், கருஞ்சீரகம்,மஞ்சள் வகைக்கு 20கிராம்,பசும்பால் அரை லி, சேர்த்துக் காய்ச்சி, 21எருக்கம்பூ சேர்த்து காய்ச்சி வடித்து பூசிவர பக்கவாதம், பாரிசவாயு,உடல்இழுப்பு,உடல்வலி தீரும்
9. உத்தாமணி இலைசாற்றுடன் சமன் எலுமிச்சைசாறு கலந்து பூச மூட்டுவலி கட்டுப்படும்
10. 50கிராம் குங்கிலியதூளை அரைலி .ந.எண்ணையில் காய்ச்சிப் பூச மூட்டுவலி தீரும்
11. குப்பைமேனிச்சாறு சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி வடித்துப்பூச மூட்டுவலி தீரும்
12. ஊமத்தைஇலையை ந.எண்ணையில் வதக்கி ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்
13. போஸ்தக்காய்1,துத்திஇலை1பிடி சிதைத்து,சுண்டக்காய்ச்சி ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்
14. வெள்ளைக்கடுகை அரைத்து, பருத்தித்துணியில் தடவிக்கட்ட கீல்வாயு, இரத்தக் கட்டு குணமாகும்
15. கல்யாணமுருங்கை இலைகளை நசுக்கி,வதக்கிக்கட்ட கீல்வாயு குணமாகும்
16. பற்பாடகம்வேர் 100கிராம் சிதைத்து,1லி .ந.எண்ணையில் காய்ச்சி வடித்துப் பூசிவர கீல்வாயு குணமாகும்
17. நெருப்பில்சுட்டசெங்கல்மீது,
எருக்கன்பழுப்பு இலைகள் 3 பரப்பி,குதிகாலை 5 நிமிடங்கள் வைத்து எடுக்க குதிகால்வாதம் தீரும்
18. மிளகாய்பூண்டு இலைகளை அரைத்துப் பற்றிட இடுப்புவலி குணமாகும்
19. கோரைக்கிழங்குசூரணம் அரைதேகரண்டி தினமிருவேளை 200மிலிபாலில் கலந்து பருக மூட்டுவலி,தசைவலி குணமாகும்
20. முடக்கற்றான் இலைகளை இரசமாக செய்து உணவில் சேர்த்து சாப்பிட கைகால் குடைச்சல், மூட்டுவலி குணமாகும்
21. மூசாம்பரம்100,அதிமதுரம்100, சிற்றாமுட்டி100,கற்பூரம்20கிராம்,குண்றிமணி20கி, சுக்கு40 கிராம் சேர்த்தரைத்து, தேவையான அளவெடுத்து 1முட்டைவெண்கரு, 1தேகரண்டி ந.எண்ணை சேர்த்துக் கலந்து வீக்கங்களுடன் கூடிய மூட்டுவலிக்குப் பற்றிட குணமாகும்
22. கோதுமையை பொன்னிறமாய் வறுத்துப் பொடித்து,சலித்து தேன் கலந்து சாப்பிட மூட்டுவலி குணமாகும்
23. கொன்றை வேர்பட்டை 100கிராம் சிதைத்து,5ல்1ன்றாய்க் காய்ச்சி 200மிலி, தினமிரு வேளை பருகிவர குடல்வாதம்,வாதநோய்கள் தீரும்
24. கஸ்தூரிமஞ்சள்1, சிறிதுசாம்பிராணி,1தேகரண்டி கடுகு,நீர்விட்டரைத்து, மண் சட்டியிலிட்டு சூடேற்றி,பொறுக்கும் சூட்டில் பற்றிட மூட்டுவலி குணமாகும்
25. சங்கிலை,வேம்பு,நொச்சி, நாயுருவி,குப்பைமேனிஆகியவற்றில் வேதுபிடிக்க வாத வீக்கம்,வலி, கீல்வாயு தீரும்
=============
No comments:
Post a Comment