🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪
*காலம் காட்டிக்*
*கொடுக்கும் வரை. *
*சிலர் தங்கள் முகமூடியை*
*கழட்டுவதில்லை.*
*_சரியாக நடந்து_*
*_கொள்ளவில்லை என்று_*
*_வெறுக்கப்படுபவர்களை விட._*
*_சாதகமாக நடந்து_*
*_கொள்ளவில்லை என்று_*
*_வெறுக்கப்படுபவர்களே_*
*_இங்கு அதிகம்._*
_*நேசிப்பின் உச்சம்
அவ்வப்போது விட்டுக் கொடுத்தல்......*__*வெறுப்பின் உச்சம் அப்படியே விட்டு விடுதல்.*_
_*தேடாத ஒன்று தேடிவரும் போது தேவை இருக்காது.*_
_*தேவையில்லாத போது தேடும் எதுவும் தேவையாக இருக்காது.*_
*தேவை என்ற போது கிடைத்து விட்டால் தேடலும் இருக்காது.*
_*இருக்கும் போது தேடாவிட்டால் தேடியதே இருக்காது.*_
ஒரு காட்டில் காக்கைகளும், பருந்துகளும் நிறைய வாழ்ந்து வந்தன. இரை தேடும் விஷயமாக இருதரப்புக்கும் அடிக்கடி சண்டை
வரவே கடைசியில் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. எந்த இரை கிடைத்தாலும் ஆளுக்குப் பாதியாக உண்பது என்பதே அந்த ஒப்பந்தம்.
ஒரு நாள் ஒரு மரத்தின் கீழே ஒரு நரி காயத்துடன் கிடந்ததை இரண்டு பட்சிகளும் பார்த்தன. வேடனொருவனால் காயம்பட்டிருந்த அந்த நரி, நகரக்கூட முடியாமல் இருந்தது.
'நாங்கள் இதன் மேல் பக்கத்தைத் தின்கிறோம். என்றது காக்கை.
சரி, நாங்கள் கீழ்ப்பக்கத்தைத் தின்கிறோம்' என்று ஒப்புக்கொண்டது பருந்து.
நரி அதைக் கேட்டுச் சிரித்தது. 'ஏன் சிரிக்கிறாய்?" என்று காகமும் பருத்தும் கேட்டன.
வேறொன்றுமில்லை. காகத்தை விடப் பருந்து பலசாலியான பறவை, என்று நினைத் திருந்தேன்.
கடவுளின் படைப்பில் பருந்தே உயர்ந்தது என்று உலகத்தார் சொல்கிறார்கள். ஆகவே. என் உடம்பின் மேல் பகுதியைப் பருந்துகள் சாப்பிடுவதே நியாயம். ஏனெனில் என் மேல் பகுதியில்தான் மூளை, இருதயம்
முதலான ருசியான பகுதிகள் இருக்கின்றன அதைப் போய்ப் பருந்து காக்கைக்கு விட்டுக் கொடுத்துவிட்டதே என்றுதான் சிரித்தேன் என்றது நரி.
ஆமாம். ஆமாம். இது சொல்வதும் சரிதான், எங்களுக்கு மேல்பகுதிதான் வேண்டும்' என்றது பருந்து
'முடியவே முடியாது. ஏற்கனவே பேசி முடித்தாயிற்று. எங்களுக்குத்தான் இந்த நரியின் மேற்பகுதி' என்று காக்கை சொல்லிற்று,
வாக்குவாதம் வலுத்து, காக்கைகளுக்கும் பருந்துகளுக்கும் சண்டை மூண்டது.
இரண்டு தரப்பிலும் பல பறவைகள் இறந்து விழுந்தன. உயிர் தப்பிய மிச்சப் பறவைகள் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தன. நரி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தது. பிறகு இறந்தும் காயம் பட்டும் கிடத்த பறவைகனை மெதுவாகத் தின்னத் தொடங்கியது.
கொஞ்ச நாளில் அதன் காயங்கள் ஆறின. ஆரோக்கியமும் உடல் வலுவும் பெற்றுச் சந்தோஷமாக நடையைக் கட்டியது. போகும்போது, 'பலவான்களுக்குள் சண்டை வந்தால் நோஞ்சான்களுக்கு லாபம்' என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டு சென்றது.
'திறமைசாலியான மனிதர்கள் இதுபோல, இரண்டு மோதலுக்கு நடுவே லாபம் பெற முடித்தால் நல்லதுதான். இல்லாவிடில் எத்தப் பக்கமும் சேராவிருப்பதே மேல்.
எந்தக் குறிப்பிட்ட தரப்பிலும் சேர்ந்துகொள்ள மாட்டார்கள். அப்படிச் சேர்ந்து கொண்டால் அத்தக் குறிப்பிட்ட தரப்புக்கு மேலும் மேலும் கடமைப்பட நேரிடும். குறிப்பிட்ட பக்கம் சேர்ந்து வெற்றிகரமாக வெளிவருவதைக் காட்டிலும் எந்தப் பக்கமுமே சேராமல் இருப்பதுதான் லாபம்' என்று கிரேஷியன் என்ற அறிஞர் சொல்லியுள்ளார்.
*"தூண்டில் முள்ளும், தூண்டில் புழுவும் போராடும்போது மீனவன் லாபம் அடைகிறான்" என்று ஒரு சீனப் பழமொழி கூறுகிறது.*
_*ஒருத்தர் நம்மள வேணாம்னு தூக்கி எறிஞ்சா,*_
_*நமக்கானவங்க அவங்க இல்ல*_
_*என்பது தான் பொருளே தவிர,*_
_*நமக்கென இனி யாருமே இல்லை*_
_*என்பது அர்த்தம் அல்ல.*_
_*தன் தவறுக்கு மற்றவரை காரணம் காட்டி பழகியவனுக்குவாய்ப்பு*_ _*கொடுத்தாலும் திருந்தப் போவதில்லை*_
🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪
*நட்பும் நிகழ்வும் குழு*
No comments:
Post a Comment