Saturday, May 10, 2025

வாழ்க்கை என்பது சுலபமா?

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

தினம் ஒரு சிந்தனை

**

வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை! என்கிறார் எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள். 


அவர் சொல்லும் விளக்கம் இது தான்: “நீ சரியாக இருந்து விட்டால் வாழ்க்கையில் எல்லாம் சரியாகி விடாது. நீ சரியாக இருக்கிறாய், அல்லது சரியாக இருக்க முயற்சி செய்கிறாய் என்பது அடுத்தவர்களுக்குத் தெரிந்தால் போதும், உன்னைக் கலைக்க பல

மனித மிருகங்கள் வரும். 


குடும்பத்தில் உள்ள உறவுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நம்மை வேதனைக்கு உள்ளாக்கும். 


அதனால் அந்த உறவுகளை விட்டு வெளியேற முடியாமல், அவர்களை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். 


நீ எங்கு போய் வாழ்ந்தாலும், இது போன்ற பலரோடு வாழத் தான் வேண்டும். 


தெருவிலே வாழ்கின்ற நாய்களில் எதாவது ஒரு நாய் நம்மை முகர்ந்து பார்த்து விட்டுத் தான் போகும். 


முகரும் நாய்களில் எந்த நாய் “உத்தமம்” என்று நீ தேர்ந்தெடுக்க கற்றுக் கொள்ளத் தான் வேண்டும். 


நாய்கள் குலைக்கும்!. கவ்வும்! நக்கும்! அவற்றுக்கு ஒரு நாளும் பயப்படாதே! அவைகளுக்குத்

தீனியை  தூக்கிப் போடு! ஆனால், மனதிற்குள்ளே அவைகளிடம் இருந்து விலகியிரு.


உன் வேலைகளைக் கவனித்த படி

இரு! ஏனெனில் வாழ்க்கை அவ்வளவு  சுலபமில்லை! 


🟩🟩🟩🟩🟢🟩🟩🟩

No comments:

Post a Comment