Monday, May 12, 2025

மனம் தான் வாழ்வின் விளைநிலம்.!

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

*இன்றைய சிந்தனை*


 மனம் தான் வாழ்வின் விளைநிலம்.

 *மத்தவங்க என்ன செய்யறாங்கன்னு உத்து உத்து பாக்காத வரை...*

*உங்க நிம்மதி உங்க கையில தான் இருக்கும். *

போரில் வெற்றி பெற்ற மன்னர் ஆணவம் கொண்டார் .

தன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாது என்பதால் மன்னரின் ஆணவம் அதிகரித்தது. அதன் முடிவாக

பிறரை அவமானப்படுத்தி பேசுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார். 

ஒருநாள் அரண்மனைக்கு வந்த துறவியை பார்த்து, "என்ன எருமை மாடு போல் நடந்து வருகிறீர்களே?" எனக் கூறி சிரித்தார். துறவி சற்றும் கலங்கவில்லை.

மாறாக மன்னரைப் பார்த்து புன்னகைத்தபடியே, "நான் வணங்கும் கடவுளான புத்தரைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தார்.


தான் இகழ்ந்து பேசினாலும் தன் மீது கோபம் கொள்ளாத துறவியை பார்த்து மன்னர் வியந்தார். மன்னர் துறவியிடம், "நான் உங்களை இகழ்ந்து பேசியும் நீங்கள் என்னை புத்தர் என்று கூறுகிறீர்களே! ஏன்?"என்று கேட்டார். 


அதற்கு துறவி, "மன்னரே! நமது உள்ளம் போலவே இந்த உலகம் காட்சியளிக்கும் என்பார்கள். எனது உள்ளத்தில் புத்தர் இருப்பதால் எங்கும் புத்தமயமாகவே காட்சியளிக்கிறது.

அதைப்போல உங்கள் உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அது உங்களுக்கு காட்சியளிக்கிறது. சற்று ஆழமாக சிந்தித்தால் நான் சொல்வது புரியும் " என்று புன்சிரிப்புடன் கூறினார்.


மேலும், துறவி, "இந்த உலகில் தாழ்ந்தவரோ உயர்ந்தவரோ எவரும் இல்லை" என்றார் துறவியின் பேச்சைக் கேட்ட மன்னர் உண்மை விளங்கி தனது ஆணவத்தைக் கைவிட்டார். 


*வியர்வை துளிகளும்,* *கண்ணீர்  துளிகளும்* *உப்பாக  இருக்கலாம்...*

*அவைகள் தான் வாழ்க்கையை*

*ஒரு நாள் இனிப்பாக மாற்றும் .*


 _*தர்மவழியில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. ஆசைகளில் சிக்கினால் அது பாவத்தில் தள்ளி விடும்.*_


_*காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. நற்பணிகளில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்குங்கள். மற்றவர் பேச்சை பொருட்படுத்தாதீர்கள். உங்களின் மனதிற்கு நல்லவராக இருந்தால் போதும்.*_


_*பணிவு, பண்பு , ஒழுக்கம், உழைப்பு, அறம் இதையெல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்கு நாம் கட்டாயம் சொல்லித் தர வேண்டும்.*_


 _*மனம் தான் வாழ்வின் விளைநிலம்.!*_

 _*அதன் தன்மையைப்

பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது.*_


🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

No comments:

Post a Comment