Thursday, May 1, 2025

மலைவேம்பு

 *தினம் ஒரு மூலிகை *

ஈட்டி வடிவ இலைகளையும் கொத்தான இளம் சிவப்பு மலர்களையும் உருளை வடிவ பழங்களையும் உடைய உயர்ந்து வளரும் மரம் இதன் எல்லா பாகங்களும் கசப்புத் தன்மை உடையவை இலை பட்டை வேர்பட்டை பூ பழம் மருத்துவ குணம் உடையது இலை

குடற் புழு நீக்குதல் மலமிளக்குதல் சிறுநீர் பெருக்குதல் மாதவிலக்கு தூண்டுதல் குணமுடையது பூ வீக்கம் கரைத்தல் இசிவு அகற்றுதல் வாந்தி உண்டாக்குதல் ஆகிய குணம் உடையது பத்து மில்லி இலை சாற்றை பாலில் கலந்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அதிகாலையில் கொடுத்து வர கர்பப்பை குற்றங்கள் நீங்கி மகப்பேறு வாய்க்கும் 50 கிராம் வேர் பட்டையை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 250 மில்லி ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி 15 மில்லியாக மணிக்கு ஒரு தடவை ஒரு நாள் கொடுத்து மறுநாள் காலையில் பேதிக்கு கொடுக்க குடற்புழுக்கள் அனைத்தும் வெளியேறும் இந்நீரால் பால்வினை நோய் புண்களை கழுவ அவை குணமாகும் இலை பூவை அரைத்து பற்று போட கடும் தலைவலி தீரும் உன் சொறி அரிப்பு ஆகியவை தீரும் நன்றி

No comments:

Post a Comment