Tuesday, August 13, 2024

 பிரச்னையைகளை நான் எனக்கு தெரிந்த அறிவில் எதிர்கொள்கிறேன் என்றே பயணித்து !! 

ஓர் கட்டத்தில் ..

பிரச்னையை தீர்க்கிறேன் என்ற பெயரில் இன்னும் பிரச்னையை வலுப்படுத்தவே செய்தோம் என்று உணர்ந்த மனமே, இறையருளை கொண்டு எதிர்கொள்வது எப்படி என்ற அடிப்படை சிந்தனைக்கே வரும் ..

முதலில் பிரச்சனையை அடிப்படையாக உருவாக்கியதே நீங்கள் தான்

என்றே இறையருள் உணர்வித்து அருளும் !!

அதுவரையில் 

நான் என்ற ஆணவம் மேலோங்க யாரோ பிரச்னைக்கு காரணம் என்று உலகத்தையே சுட்டி காட்டிக்கொண்டு இருந்த நம் கை !! 

நம்மை நோக்கியே திரும்பும் ..

பிரச்னையை அடிப்படையாக மதிப்பும் !! முக்கியத்துவமும் கொடுத்து உருவாகபடுத்தி, உருவாக்கியதே நீ தான் எனும்போது !!

அந்த பிரச்னைக்கு தீர்வும் உன்னிடமே அருளப்பட்டே இருக்கு என்ற இறையருள் ..

உனக்கு கொடுத்தும் உணராத !! அந்த கோணத்தில் யோசிக்காத !! அந்த விதத்தில் உனக்கு அருளிய திறனை வெளிப்படுத்தாத உன்னை உன்னில் இருந்து தூண்டி, உன் மற்றம் வழியே தான், உனக்கான தீர்வை அருளும் ..

ஒவ்வொரு பிரச்னையும் ஓர் வரம் தான் !! 

அதை 

சாபம் என்று ஏமாற்றிக்கொண்டு முடங்கும்  முன்னே கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள் .. 

ஒவ்வொரு பிரச்னையும் 

உங்களை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகத்தியது தானே ..

யாரையோ நம்பிய உங்களை !! உங்களை நம்பும்படி உணர்வித்து முன்னேறியது தானே ..

எப்படி செய்ய கூடாது ?? என்று செய்த பயனை கொண்டே உங்களை பக்குவப்படுத்தியது தானே ..

இது எல்லாம் மாறாது ?? என்ற உங்கள் கற்பனையை உடைத்து எறிந்தது தானே ..

இவ்வளவு தான் நான் !! என்றே உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டதில் இருந்து எப்படியும் நான் என்ற உங்கள் எல்லையை விரிவாக்கி அருளியது தானே ..

கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் ..

உங்களுக்கு வெளியே இருந்து கிட்டிய தீர்வுகள் எல்லாம் உங்களை பிரச்சனையை சமாளிக்கவே வைத்தது !!

அதாவது இப்போதைக்கு அந்த பிரச்சனை இல்லை ஆனால் எப்போதாவது மீண்டும் முளைக்கும் அல்லது வேறு ரூபத்தில் வரும் என்பது தானே அந்த சமாளிப்பு ..

அதே 

உங்களை நீங்களே உணர்ந்து திருத்தி /  திருந்தி  / மாற்றிக்கொண்டு / கண்டுக்காதே கடந்தது சென்று / தானே இக்காரியத்தை சோம்பேறித்தனம் கடந்தது செய்து  போன்ற உங்களை நீங்களே உவந்து மாற்றிக்கொள்ள !! அந்த பிரச்சனை மீண்டும் வரவே வராத தீர்வு கிட்டும் தானே ..

நான் பிரச்னையை தீர்க்கிறேன் என்று விளையும்போது சமாளிப்பே கிட்டும் !!

நான் ஆகிய இறையிடம் அப்பிரச்சனையை சமர்ப்பித்து, தன்னையும் ( நான் என்ற ஆணவத்தையும் ) சமர்ப்பித்து !! 

"இதற்க்கு என்ன தீர்வு என்னை மாறுவதால் கிட்டும் என்று உணர்வித்து அருள் இறைவா ?? " என்ற பூரண சரணாகதி ஆகும்போது ..

உன்னிடம் உனக்கு அருளியும் நீ உணராத ?? பயன்படுத்த தயங்கிய ?? கெளரவம் ?? திமிர் ?? போன்ற மாயாமலங்கள் முடிய தீர்வுகள் உன்னில் இருந்து வெளிப்படும் ..

அதை வெளிப்படுத்த !!

சமாளிப்பு கடந்த தீர்வு உனக்கு சாத்தியம் ஆவதோடு !! 

உன் பக்குவமும் மேன்பட்டு !! 

உன்னுள் அமைதி !! சந்தம் !! இன்ப / துன்ப மாயையை அற்ற ஆனந்தம் ஆளும் ( இறையின் அரவணைப்பாய் )

வாழ்த்துகள் 

இத்தனையும் பெற்றும் !! வறட்டு கவுரவம் !! வீண் பிடிவாதம் போன்ற தன்மைகளால் !! உங்களை நீங்களே இழக்கும் தன்மையில் இருந்து விடுவித்து அருள்வது இறை ஒன்றுமட்டுமே ..

No comments:

Post a Comment