Saturday, August 3, 2024

செய்தித் துளிகள் 03 08 2024

⛑️⛑️100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு நாளை 4.08.2024(ஞாயிற்றுக்கிழமை)  பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


இவ்விழாவில் சர்வதேச/ தேசிய/ மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நடைபெறுகிறது 


⛑️⛑️3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.10 வரை நீட்டிப்பு.

⛑️⛑️முதுநிலை மருத்துவ படிப்புகளில் இருந்து 15 படிப்புகளை நீக்குவதற்கான அரசாணையை நிறுத்தி வைத்தது தமிழக அரசு                                                           ⛑️⛑️TNPSC - மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 6032 நபர்கள் தேர்வு தொடர்பான செய்தி வெளியீடு.

⛑️⛑️நீட் தேர்வு ரத்து இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

⛑️⛑️திண்டுக்கல்,தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

⛑️⛑️நீட் விவகாரம் - விரிவான காரணங்களுடன் தீர்ப்பு

"நிபுணர் குழு நீட் தேர்வின் புனித தன்மையை பாதுகாக்கவும், பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்"

"உயர்நிலை நிபுணர் குழு போட்டித் தேர்வில் நடைபெறும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்"

"நீட் தேர்வு மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்"

"நீட் தேர்வு போன்றவற்றை எழுதும் தேர்வர்களுக்கும், நடத்துவோருக்கும் மனநலம் மேம்படும் வகையில் கவுன்சிலிங் முறை ஏற்படுத்த வேண்டும்"

-உச்சநீதிமன்றம்

⛑️⛑️வெளிநாடுகளில் 

படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயண செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியீடு.

⛑️⛑️"தமிழ்நாடு அரசு மற்றும் நான் முதல்வன் திட்டத்தால் மட்டும்தான் நான் இங்க இருக்கேன்.

இந்த திட்டம் இல்லை என்றால் இந்த இடத்திற்கு நான் வந்திருக்க முடியாது"

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்குள் கல்வி கற்க செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் பேட்டி

⛑️⛑️உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் இந்தியாவிலே முதல் மாநிலம் தமிழ்நாடு..!- சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெருமிதம்

'நான் முதல்வன்' திட்டம் மூலம் கடந்த மாதம் 9,000 மாணவர்களுக்கு சாப்ட்வேர் பயிற்சி அளித்துள்ளோம்!

அரசு பள்ளியில் படித்து சென்னை IITயில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை,

 👉2021 27 பேர்

👉 2022 - 115 பேர்

 👉2023 - 147 பேர்

அடுத்த 2 ஆண்டுகளில் 250 ஆக அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். இது 1000 ஆக அதிகரித்தால் ரொம்ப சந்தோஷம்.

அரசு பள்ளியில் படித்து ஐஐடியில் சேர்ந்துள்ள பார்த்தசாரதி என்ற மாணவன் இந்த நூற்றாண்டின் அப்துல் கலாமாக வருவார்!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் இந்தியாவிலே முதல் மாநிலம் தமிழ்நாடு

என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசினார்.

⛑️⛑️ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை UGC NET தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

வினாத்தாள் கசிவு புகாரை தொடர்ந்த கடந்த மாதம் நடைபெற்ற UGC NET தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், புதிய தேதிகள் அறிவிப்பு                                               ⛑️⛑️10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சாரை சாரையாக சேர்ந்து வருகிறார்கள்

திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு 75 அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள்.

2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்தாண்டு 447 மாணவர்கள் என இரு மடங்காக அதிகரித்துள்ளது.

புதுமைப் பெண் திட்டத்தின் பயனாக உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது.

 ‘நான் முதல்வன்’ இணையதளம் மற்றும் மணற்கேணி செயலியில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ள பொதுத்தேர்வு வினாத்தாள்கள் உள்ளன.

தேசிய சட்டப்பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 தமிழ்நாட்டு மாணவர்கள் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளனர்

அந்த மாணவர்களின் முதல் முறை பயணச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

⛑️⛑️கேரளா - வயநாடு நிலச்சரிவு பேரழிவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக ஜோ பைடன் அறிக்கை

⛑️⛑️கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரிப்பு

⛑️⛑️வயநாடு பகுதியில் ராணுவத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ!

மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை RISAT SAR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களை வழங்கி உள்ளது இஸ்ரோ.

இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்களை வழங்கி உள்ளது.

⛑️⛑️காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்:

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி ராமேஸ்வரம் மீனவ விசைப்படகு மூழ்கிய சம்பவத்தில், உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் வழக்குப்பதிவு இன்றி தமிழ்நாடு திரும்பும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்

-ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவப்பு

⛑️⛑️இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டோர் மாயம்                                ⛑️⛑️குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2,320 உடன், அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.130 சேர்த்து, ரூ.2,450க்கு கொள்முதல்"

"பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,405 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும்"

செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு

⛑️⛑️பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவற்றை மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் 

வயநாடு நிலச்சரிவு விவகாரத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளோம் 

வயநாடு நிலச்சரிவு குறித்து மக்களவையிலும் குரல் எழுப்புவோம் 

"பாதிக்கப்பட்டவர்கள் எங்கு குடியேற விரும்புகிறார்களோ, அங்கு அவர்களை குடியேற அரசு அனுமதிக்க வேண்டும்

ராகுல்காந்தி.                                             ⛑️⛑️போலியான, தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளர் விசாரித்து, ஆதாரம் இருந்தால், பத்திரங்களை செல்லாது என்று அறிவிக்கலாம் என்ற அரசாணை ரத்து

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

⛑️⛑️சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு.

.ஒரு கிராம் தங்கம் ரூ.6,460க்கும், ஒரு சவரன் ரூ.51,680க்கும் விற்பனை

⛑️⛑️முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 7ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவிப்பு.

No comments:

Post a Comment