Monday, August 5, 2024

மாசிக்காய் -தினமும் ஒரு மூலிகை


*தினம் ஒரு மூலிகை* **

 மாசிக்காய் மற்ற மரங்களின் காயை போல் பூவிலிருந்து காய்க்காது குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒருவகை குடம்பிகள் சுரக்கும் திரவம் உறைந்து திரண்டு உருண்டையாக கெட்டிப்படும் இதுவே மாசிக்காய் ஆகும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திசுக்களை இறுகச் செய்தல் முறை நோய் அகற்றுதல் குருதிப் போக்கு அடக்குதல் உடல் உரமாக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது மாசிக்காய் கருகாமல் வறுத்து பொடித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேன் அல்லது நெய்யில் உட்கொள்ள பெரும்பாடு நீர்த்த கழிச்சல் ரத்த கழிச்சல் மிகு வியர்வை ஆகியவை தீரும் மாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதில் உள்ள வெடிப்பு புண் ஆகியவை ஆறும் தேமல் படைகளுக்கு தடவி வர நீங்கும் மாசிக்காயை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்க பல் நோய் தீர்ந்து ஈறு பலப்படும் நன்றி.

No comments:

Post a Comment