Sunday, September 8, 2024

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(08-செப்)

*தேவன்.*


✍ பிரபல நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவரான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்தார்.


✍ இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வெளிவந்துள்ளது. இவர்

சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார்.


✍ இவர் வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ் என்று அசோகமித்திரன் இவரை குறிப்பிட்டுள்ளார்.


✍ கால் நூற்றாண்டு காலத்து கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உலக விஷயங்களை யதார்த்தமான, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுத்திய தேவன் 1957ஆம் ஆண்டு மறைந்தார்.


*பூபேன் அசாரிகா.*


✍ 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இந்தியக் கவிஞரான பூபேன் அசாரிகா பிறந்தார்.


✍ இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த இந்திய பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.


✍ இசையமைப்பாளராக நாட்டுப்புற இசை கலந்த தற்கால இசையமைப்புக்காக அறியப்பட்டார்.


✍ தனது தாய்மொழியான அசாமிய மொழி தவிர இந்தி, வங்காள மொழி எனப் பிற மொழிகளிலும் பாடியுள்ளார்.


✍ பாரத ரத்னா, பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி விருது போன்ற விருதுகளை பெற்ற இவர் 2011ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment