Monday, September 16, 2024

இன்றைய நாள்

 *இன்றைய நாள்*

(16-செப்)

*உலக ஓசோன் தினம்.*

🌀 பூமிக்கு கவசம் போல இருக்கும் ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.

🌀 முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்தபோது

அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1987ஆம் ஆண்டு ஓசோன் படலம் குறித்த சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.


🌀 ஐ.நா.சபையானது, செப்டம்பர் 16ஆம் தேதியை உலக ஓசோன் தினம்/உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.


🌀 ஓசோனை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், நம்முடைய நடவடிக்கைகள் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.


*முக்கிய நிகழ்வுகள்..*


👉 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியா நாடு உருவாக்கப்பட்டது.

No comments:

Post a Comment