Monday, September 16, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்- 16 செப்டெம்பர்

 *இன்றைய நாளில் பிறந்தவர் ‌*

(16-செப்)

*எம்.எஸ்.சுப்புலட்சுமி.*

🎶 ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒப்பற்ற இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

🎶 1926ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின்

பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.

🎶 இவருக்கு பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி, இசைப்பேரறிஞர் விருது, பத்ம விபூஷண், சங்கீத கலாசிகாமணி விருது, காளிதாஸ் சம்மன் விருது, பாரத ரத்னா மற்றும் மகசேசே பரிசு போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

🎶 எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி சென்னையில் மறைந்தார்.


*ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி.*.

💉 வைட்டமின் சி-யை கண்டுபிடித்தவரும், மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஹங்கேரி ஆராய்ச்சியாளருமான ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் பிறந்தார். செல்கள், வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1937ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

💉 இறுதிவரை மனிதகுல நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி 1986ஆம் ஆண்டு மறைந்தார்.


*பி.பி.கிங்.*

👉 1925ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி புகழ்பெற்ற அமெரிக்க பாடகர்-பாடலாசிரியரான பி.பி.கிங் பிறந்தார்.

👉 தி கிங் ஆஃப் தி ப்ளூஸ் என்ற புனைப்பெயரைப் பெற்றார்.

👉 1987ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான கிராமி விருதைப் பெற்றார்.

No comments:

Post a Comment