Sunday, September 10, 2023

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-5

ஆன்மீகத்தைப் புறக்கணித்து விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினால், மூன்றே தலைமுறைகளில் நம் பண்பாடு அழிந்து விடும்.

---

* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.

-----

நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள்.

----

ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள்



-


* சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.

No comments:

Post a Comment