Friday, September 22, 2023

படிக்காதமேதை...ன்னு சும்மாவா சொல்றாங்க

 மாதம்தோறும் உழைக்காமலேயே அனைவருக்கும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை

செயல்படுத்தினால் அரசு என்னவாகும்? என்று படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.


பெருந்தலைவர் 

#காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில்...

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...


நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது...


நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....


ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும்னு கேட்கிறாங்க...

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....


பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டே தான் இருக்கு.....

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்...


அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்...


இப்போ பணம் இல்லாதவங்களே நாட்ல கிடையாதுன்னு வச்சுக்குவோம்...


கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு பக்கம் போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்... அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது. 

விவசாய வேலைக்கு ஆள் வராது... 

ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்..

எப்படி வருவான்னேன்..?


பணம் வேணும்னு உழைக்கிறாங்க....

கட்டு கட்டா பணம் இருக்கும்போது 

எவன் தான் வேலைக்கு வருவான்...?


பணத்தை தலைக்குமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத்துணியை போட்டு கிட்டு... கெடக்க வேண்டியது தான்!


ஊரே தூக்கம் வராம கெடக்கும்....


இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்ல..

வெத்து பேப்பர் தான்னேன்....!

உழைப்பு தான் பணம்ன்னேன்...!


பொருளாதாரத்திற்கு மூல ஆதாரமே... உழைப்பு தான்னேன்....!


உழைப்பு இல்லாமல்...

ஒன்னுமே கெடைக்காது!

ஒன்னுமே கெடையாது!

இப்ப தெரிஞ்சுதா...?


உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்!"


இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன் சொன்னது!


படிக்காதமேதை...ன்னு சும்மாவா சொல்றாங்க!

No comments:

Post a Comment