Sunday, September 10, 2023

சனாதன தர்மம்'* 🙏 என்றால் என்ன? *அதை ஏன் கடை பிடிக்க வேண்டும்❓

நம் முன்னோர்கள் உலகின் முன்னோடிகளாக... 


வழிகாட்டியாக திகழ்ந்தவர்கள். 🎯


உண்ணும் உணவு தானியங்களில் *'நவதானியங்கள்'* என்று ஒன்பது தானியங்களை நிர்மாணித்தார்கள்... 


அந்த தானியங்களுக்கு அதிபதியாக *'நவக்கிரகங்கள்'* என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தான். 


நெல்  - சந்திரன்


கோதுமை  - சூரியன்


துவரை - செவ்வாய்


பாசிப்பயறு  - புதன்


கொண்டைக்கடலை - குரு


மொச்சை - சுக்கிரன்          


எள்  - சனி


உளுந்து  - ராகு


கொள்ளு  - கேது


இவ்வாறு நவதானியங்களை ஒன்பது என நிர்மாணித்த தமிழன் *திசைகளை எட்டாக* பிரித்தான்... 


கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

வட கிழக்கு

வட மேற்கு

தென் கிழக்கு

தென் மேற்கு


திசையை எட்டாகப் பிரித்த தமிழன் 

*இசையை ஏழாக* கொடுத்தான்... 


*ச ரி க ம ப த நி*


இசையை ஏழாக கொடுத்த தமிழன், *சுவையை ஆறாக* பிரித்தான்... 


இனிப்பு

கசப்பு

கார்ப்பு

புளிப்பு 

உவர்ப்பு

துவர்ப்பு


சுவையை ஆறாக பிரித்த தமிழன், *நிலத்தை ஐந்தாக* பிரித்தான்... 


குறிஞ்சி (மலைப்பகுதி) 

முல்லை ( வனப்பகுதி) 

நெய்தல் ( கடல் பகுதி) 

மருதம் ( நீர் மற்றும் நிலம்) 

பாலை ( வறண்ட பகுதி) 


நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன், *காற்றை நான்காக* பிரித்தான்... 


தென்றல்

வாடை 

கோடை 

கொண்டல்


கிழக்கிலிருந்து வீசும் காற்று... *கொண்டல்*


தெற்கிலிருந்து வீசும் காற்று... *தென்றல்*


மேற்கிலிருந்து வீசும் காற்று... *கோடை* 


வடக்கிலிருந்து வீசும் காற்று... *வாடை*


காற்றை நான்காக பிரித்த தமிழன், *மொழியை மூன்றாக* பிரித்தான்... 


இயல்

இசை 

நாடகம் 


மொழியை மூன்றாக பிரித்த தமிழன், 

*வாழ்க்கையை இரண்டாக* வகுத்தான்... 


*அகம்* 

*புறம்*


கணவன் மனைவி வாழும் வாழ்க்கை

அக வாழ்க்கை... 


வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் 

புற வாழ்க்கை...


இவற்றை அகநானூறு, புறநானூறு என்று இலக்கியத்தில் தெளிவாக அறியலாம். 


வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்,

*ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக* வைத்தான்... 🙏


அதோடு, அதை... 

*உயிரினும் மேலாக* வைத்தான். 🎯


இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்,


*"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்* *உயிரினும் ஓம்பப் படும்"*


அந்த ஒழுக்கங்கள் தான் 


*'சனாதன தர்மம்'* 🙏


'சனாதனம்' என்றால்... 


*என்றுமே நிலைத்திருக்கும் தன்மை* என்று பொருளாகும். 


இதை *'அனந்தம்'* என்றும்  கூறலாம். 


*'தர்மம்'* என்பது ஒரு சட்டம். 

அதாவது, 

ஒரு நெறிமுறை... 

ஒழுக்கம்...

*நியதி*


உதாரணமாக நாம் சாலையில் சென்றோமானால் இந்தியாவில் இடது பக்கமாக செல்ல வேண்டும். 


இதுவே அமெரிக்காவில் நாம் வலது புறமாகத் தான் செல்ல வேண்டும். 


இந்தியாவில் இது தர்மம். அமெரிக்காவில் அதுவே தர்மம்.


ஆக... 


என்றும் நிலையான... 


என்றும் மாறாத... 


*'இயற்கையின் நியதி'* தான்... 

*'சனாதன தர்மம்'*🙏


இது தான்,

சரியான வாழ்வியல் நெறிமுறை... 

*ஒழுக்கம்.*


இதை கடைபிடித்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 


அதாவது, 

'இயற்கையின் நியதிகளான ஒழுக்கங்களை... 


சனாதன தர்மத்தை கடைபிடித்தால் தான் வாழ்வில் உயர்வு கிடைக்கும். 


அந்த ஒழுக்கங்களை... 

சனாதன தர்மத்தை உயிரின் மேலாக போற்ற வேண்டும்.' என்றுரைத்துள்ளார் நம் திருவள்ளுவர். 


இன்னும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால்... 


இன்று சமூகத்தில் பலவிதமான சூழ்நிலைகள் உள்ளன. 


இன்றைய சமூகத்தை நமது முந்தைய தலைமுறையினரின் சமூகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 


இன்றுள்ள சமூகம் நாளை வேறுமாதிரி இருக்கும். 


இதைப் போல மனித வாழ்க்கையில் மாறிக் கொண்டேயிருக்கும் விசயங்களுக்கு ஒருவிதமான தர்மங்களை அதாவது சட்டங்களை நாம் வகுத்துள்ளோம். 


அதைக் கையாளுவது என்பதும் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக் கொண்டேயிருக்கும். 


ஏனென்றால் சூழ்நிலைகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. 


ஆனால்... 


நம் உயிரோடு சம்மந்தப்பட்ட *'உள்தன்மை'* அதாவது இயற்கையின் நியதிகள் என்ற ஒழுக்கங்கள் என்றுமே மாறாதது.


இது நிதர்சனமான உண்மை. 


இதை தான் சனாதன தர்மம் என்கிறோம். 


எது என்றுமே மாறாத உண்மையான ஒழுக்கங்களாக உள்ளதோ அதை நோக்கிச் செல்லுதல். 

மற்றும் 

அதை அடைவதற்கான வழிமுறைகளை உருவாக்குதலே சனாதன தர்மமாகும்.


அனைத்திற்கும் ஒவ்வொரு தர்மமுண்டு.


ராஜ தர்மம், 

குடும்ப தர்மம், 

கணவன் தர்மம் மற்றும் மனைவி தர்மம் 

என்று கூறலாம். 


அதே போல அந்த வெளிச் சூழல் தொடர்பான பல தர்மங்கள் உள்ளன... 


அனைத்தும் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. 


ஆனால் நம் உயிரோடு தொடர்புடைய *'ஸ்வதர்மம்'* மட்டும் என்றுமே மாறுவதில்லை. 


இதை தான் சனாதன தர்மம் என்கிறோம். 


இதனை 'வாழ்வியல் நெறிமுறைகளாக...'


ஒழுக்கங்களாக வகுத்து... 


உலகின் தலைசிறந்த பண்பாடு, கலாச்சாரத்தை கடைபிடித்து சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்.


இன்று நாம் கூறும் 'எங்கள் மதம், உங்கள் மதம்' என்பதெல்லாம் தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றியுள்ளது. 


அதற்குமுன் உன் மதம் என் மதம் என்பதில்லை. 


பிறந்த ஒவ்வொரு உயிரும் இறுதியில்  *முக்தி* யடைவதே நோக்கமாகும். 


இது நமது *அந்தராத்மாவிலேயே* (அக ஜீவனிலேயே) உள்ளது. 


இதற்காகவே மனிதருக்குள் 'தேடல்' என்பது இயற்கையாக படைக்க பட்டுள்ளது. 


அந்தத் தேடலுக்கு ஒரு சரியான நோக்கத்தை அமைப்பதே *ஆன்மீகமாகும்.* 🙏


நாம் நமது *பிழைப்பிற்கான தேடலில்* உள்ள போது, 

'உணவு உணவு' என்றும்...

"பொருள், பணம்" என்றும்

மனம் சிந்திக்கிறது. 


அந்தத் தேடல் நிறைவடைந்து விட்டால் 'சுதந்திரம்' என்ற தேடல். 


அடுத்தாக 'பேரானந்தம்' என தேடல் விரிவடைகிறது. 


அது அனைவருக்குமே இயற்கையாக அக ஜீவனில் உள்ளதாகும். 


அதாவது... 


நாம் தற்பொழுதுள்ள நிலையை... 

'தற்பொழுதுள்ள வளையத்தைத் தாண்டி வளர வேண்டும்' 

என்ற எண்ணம் எல்லா மனிதனுக்கு இயற்கையாக உள்ளது.


அந்த நோக்கத்திற்கு சரியான வழிமுறைகளை அமைத்து கொடுத்தது தான் நமது *இந்து கலாச்சாரமாகும்.* 🙏


சைவம் 

மற்றும் 

வைணவம் போன்ற பல வகையான பிரிவுகள் இருப்பதால் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. 


திருநீறு, 

திருமண், 

சந்தனம், 

குங்குமம்... 

என்று அவரவர் விருப்பப்படி வைத்துக் கொள்ளலாம் . 


எதுவும் வைக்காமலும் இருக்கலாம். 


இருப்பினும், 

நமது நோக்கம் ஒன்றே... 


அது மனிதனுடைய ஆத்ம 'வளர்ச்சி.'

அதாவது, 

*பிறவி பயன்* 🎯


மனிதன் எவ்வாறு வளர்ச்சியடைகிறான்? 


மனிதன் வளர்ச்சியடைய அவனவன் திறமைக்கேற்றவாறு... 


*நான்கு விதமான யோகங்கள்* உள்ளன.


1. நமது உடல் பலமாக இருக்குமேயானால் செயலில் முழுமையாக செயல்பட்டு முழு ஈடுபாட்டுடன் மனிதன் வளர்ச்சியடைய முடியும். 


இதற்குப் பெயர்தான் *கர்மயோகா.* 🙏


2. புத்தி கூர்மையாக இருந்தால் புத்தியையே பயன்படுத்தி வளர்ச்சியடையலாம். 


இதற்கு *ஞானயோகா* 🙏


3. ஒருவேளை நாம் மனதளவில் உணர்வுப்பூர்வமாக இருப்போமேயானால்... 


*பக்தியோகா* மூலமாக வளர்ச்சியடையலாம். 🙏


4. மனிதனின் 'பிராணசக்தி' வளமாக இருந்தால்... 


இதன் மூலமாக வளர்ச்சியடைந்தால்... 


அதற்கு *கிரியாயோகா* என்று பெயராகும். 🙏


மொத்தத்தில் நான்கு விதமான யோகங்கள் மட்டுமே உள்ளன. 


அனைத்து மதங்களுமே இந்த நான்கு யோகங்களுக்குள் அடங்கியுள்ளன.


அதாவது, 

*உடல், புத்தி, உணர்வு, சக்தி* இந்த நான்கு வாய்ப்புகள் தான் உள்ளன. 


'சைவம், வைணவம்' என பல வகையான வழிபாட்டு முறைகளில் பல விதமான பயிற்சிகள் உள்ளன. 


'பக்தி அலை' தோன்றிய போது இந்தியாவில்  வைணவ தர்மம் மேலோங்கியது.


பக்தி என்பது உணர்வு... 


இந்த உணர்வை பயன்படுத்தி வளர்வது தான் பக்தி அலை. 


நமது பாரதத்தில் அவ்வாறுதான் இந்த வைணவ பக்தி அலை வளர்ந்தது. 


இதற்கு, 

"கிருஷ்ணா, ராமா" சொன்னாலே போதும். 

அல்லது 

பாடினாலே போதும் . 


இதற்கு முக்கியமாக ஈடுபாடே தேவை.

எந்தவொரு பயிற்சியும் தேவையில்லை.


இப்படி உணர்வுப் பூர்வமாகவே நாம் வளர்ச்சியடைய முடியும் என்றொரு வழிகாட்டப்பட்டது வைணவ தர்மம்.


'இந்த யோக முறை தான் சரி... 

அந்த யோக முறை தவறு' என்றெதுவுமில்லை. 


நமக்கு எந்த யோக முறை எளிதாக உள்ளதோ... 

அந்த யோக முறையை கடைபிடிக்கலாம். 


முதலில் இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 


ஒருவேளை உங்களது தந்தை யோகப் பயிற்சி செய்பவராக இருக்கலாம். 


உங்களுக்கு அந்தத் திறமை இல்லாது போனால்... 


நீங்கள் பக்தி நெறியில் வளர்ச்சியடையலாம். 


அல்லது... 


உங்களது புத்தி 'நூறு கேள்விகள்' கேட்குமேயானால் நீங்கள் ஞானயோகத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.


இவ்வாறு நான்கு விதமாக யோகங்களை தனியொரு மனிதன் தனது தேவைக்கேற்றார் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். 


ஆக... 


'சனாதன தர்மமென்பது முக்கியமாக நமது உயிருக்கும் உள்ளத்திற்கும் சம்மந்தப்பட்ட நியதிகள்... (இயற்கை சட்டங்கள், ஒழுக்கங்கள்) என்னவென்று புரிந்து கொண்டு... 


அதனுடைய அடிப்படைத் தன்மையை அறிந்து கொண்டு... 


நாம் பிறவி பயனை அடைய வேண்டும்' என்பதாகும். 


அடிப்படையை உணர்ந்து கொண்டால் தானே இந்த வளர்ச்சி சாத்தியமாகும். 


இந்த அடிப்படை தன்மையை தான் *சனாதன தர்மம்* என்கிறோம். 🙏



No comments:

Post a Comment