Tuesday, September 12, 2023

கணவன் மனைவி ஒற்றுமையும் -அருந்ததி நட்சத்திரமும்

 *சப்த ரிஷிகள்*

*சப்தரிஷிநட்சத்திர கூட்டம்*.


*வசிஷ்ட நட்சத்திரமும்*

*அருந்ததி நட்சத்திரமும்*


கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ்வது என்பது இப்போதெல்லாம் குதிரைக் கொம்பாகவே உள்ளது. 


மனிதர்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. 


முன் காலத்தில் ஒருவருக்கொருவர் சுயசார்பு அதிகம் இருந்தது. 


இப்போது அது இல்லை. அதுவே முக்கிய காரணமாக இருக்கிறதாம். 


கணவனும் மனைவியும் சண்டையில்லாமல் வாழ்ந்தார்கள் என்று 

யாராவது சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும். 


ஆனால், வசிஷ்ட முனிவரும் அவரின் மனைவி அருந்ததியும் சண்டையில்லாமல் 

இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். 


அதனால்தான், புதிதாக திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளை, அம்மி என்னும் பெரிய மலை(!) மீது நிற்கவைத்து, வானத்தில் நட்சத்திரங்களாக சுற்றிவரும் அருகருகே இருக்கும் வசிஷ்ட்டரையும் அவர் மனைவி அருந்ததியையும், புதிய மணமக்களுக்கு காண்பிக்கிறார்கள். 


இவர்கள் லட்சம் காலம் சண்டையில்லாமல் வாழ்ந்தவர்கள்; இவர்களைப்போலவே நீங்கள் இருவரும் சண்டையில்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்த அருகருகில் அன்பாய் இருந்து வாழுங்கள் என்று காண்பிக்கிறார்கள். 


மணமக்கள் அந்த நட்சத்திரங்களை பார்க்காமலேயே பார்த்ததாக பொய் சொல்லி, அதேபோலவே வாழ்வில் பொய்யாகவே வாழ்வை தொடங்குகின்றனர். 


இந்த வசிஷ்ட நட்சத்திரமும், அருந்ததி நட்சத்திரமும் சப்தரிஷி நட்சத்திர கூட்டங்களை சேர்ந்தவை. 


சப்தரிஷி நட்சத்திர கூட்டமானது, துருவ நட்சத்திர கூட்டத்துக்கு பக்கத்தில் உள்ளது. 


இந்த சப்தரிஷி நட்சத்திரக் கூட்டமானது, இந்த பூமியை ஒருமுறை சுற்றிவர சுமார் 

2700 வருடங்கள் ஆகுமாம். (உண்மையில் இந்த நட்சத்திர கூட்டத்தை பூமிதான் சுற்றிவருகிறது). 


சூரியன் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. 


அந்த கணக்கில் பார்த்தால், ஒருவருடம் எங்கே, இந்த 2700 வருடங்கள் எங்கே? 


அவ்வளவு தூரத்தில் இருக்கிறது இந்த சப்தரிஷி நட்சத்திர கூட்டம். 


அங்குதான் இந்த வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் இரண்டு நட்சத்திரங்களாக அருகருகில் இருக்கின்றனர். 


சப்தரிஷி என்னும் ஏழு நட்சத்திர கூட்டத்தில் 

நடுவில் இவர்கள் இருவரும் இருக்கிறார்களாம். 


அதனால்தான், வெகுகாலம் கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பதற்கு இவ்வளவு தூரத்தில் இருக்கும் வசிஷ்டரையும் அவர் மனைவி அருந்ததியையும் நமக்கு காண்பிக்கின்றனர்.

No comments:

Post a Comment