Wednesday, April 17, 2024

தீரன் சின்னமலை-இன்றைய நாளில் பிறந்தவர்.

 ஏப்ரல் 17

🌟 இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.


🌟 இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.


🌟 வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அப்போதிலிருந்து, *'சின்னமலை'* என்று அழைக்கப்பட்டார்.


🌟 இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.


🌟 இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை 1805ஆம் ஆண்டு மறைந்தார்.





No comments:

Post a Comment