Tuesday, April 30, 2024

கறி முள்ளி - தினம் ஒரு மூலிகை

சிறகாக உடைந்த முள் நிறைந்த இலைகளையும் நீல நிற பூக்களையும் வெள்ளை வரி உடைய உருண்டை வடிவ காய்களையும் மஞ்சள் நிற பழங்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி பாப்பாரமுள்ளி என்றும் அழைப்பதுண்டு தானாக வளரக்கூடியது இலை வேர் காய் மருத்துவ பயன் உடையது செடி முழுமையாக சதை நரம்புகளை சுருங்கச் செய்தல் காமம் பெருக்குதல் வேர் கோழை அகற்றுதல் சிறுநீர் வியர்வை பெருக்குதல் நாடி நடை மிகுத்து உடல் வெப்பம் தருதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இலை சாறு 15 மில்லி சிறிது தேன் கலந்து மூன்று வேலையாக கொடுக்க இரைபெருமல் சளி அகலும் செடி முழுமையாக பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து சமன் கற்கண்டு பொடி கலந்து அரை தேக்கரண்டி ஒரு வேலையாக தேனில் உட்கொள்ள கோழை இருமல் ஈளை இரைப்பு ஆகியவை தீரும் 100 கிராம் சமூகத்தை 600 மில்லி நீரில் போட்டு 150 மில்லியாக காய்ச்சி வடித்து 30 மில்லியாக நாளைக்கு நான்கு முறை கொடுத்து வர காய்ச்சல் நீரிழிவு இருமல் சிறுநீர் தடை நீங்கும் 

நன்றி.

No comments:

Post a Comment