Tuesday, April 30, 2024

உங்கள் சிந்தனையே உங்களை வெற்றியாளன் ஆக்குகிறது

How successful people think 

இந்த பிரபஞ்சமே சிறந்த சிந்தனையாளர்களை தான் எதிர் நோக்கியுள்ளது. இவர்கள் எப்போதுமே தனது முன்னேற்றம் மற்றும் தனது சமுதாயத்தின் சிறப்பான முன்னேற்றத்திற்க்காகவும் வாழ்பவர்கள். சரியாக சிந்திக்க தெரியாதவர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். சரியாக சிந்திக்க தெரிந்தவர்கள் தன்னை தானே சிறப்பாக நிர்வகிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களே சிறந்த வெற்றியாளர்களாகவும் வலம் வருகிறார்கள். 


 நேர்மறை சிந்தனைகள் மட்டுமே நமது வாழ்கையை வளமாக்கும் சக்தியாக இருக்கிறது. நாமும் நமது சிந்தனையை சீர்செய்வதின் மூலம் நம்மையும், நமது சமுதாயத்தையும் சரியாக வழிநடத்த முடியும். நமக்கென சிறப்பான சுயஒழுக்க விதிமுறைகளை வகுத்துகொள்ளவும் நேர்மறையான சிந்தனைகள் அவசியமாகிறது.  நாம் எப்படி சரியாக சிந்திப்பது? நாம் எப்படி சிறந்த சிந்தனையாளர் ஆவது?  இதில் நாம் மேற்காணவுள்ள விசயங்கள் நம்மை சிறந்னை சிந்தனையாளர்களாக உருவாக்கி கொள்வதற்க்கும், சிந்தனைகளை எவ்வாறு செயல்களாக மாற்றுவது என்பதை குறித்தும் விளக்குகிறது...


ஒரு கதை இருக்கு...


உன்னை நீ கவனி, உலகம் உனக்கு சொந்தமாகும்...


ஒரு ராஜா தனது நாட்டை மிகவும் செல்வ செழிப்புடன் ஆட்சி செய்து வந்தார். அங்கு இல்லாத வளங்களே இல்லை என்று கூறலாம். ஆனால் மன்னருக்கு மனநிம்மதியே இல்லை. நீண்ட நாட்களாக மனநிம்மதி இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் அவருக்குள் மேலோங்கி கொண்டே இருந்தது. 

ராஜா தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் தனது குதிரையில் மலையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். இடையே மரத்தடியில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரை பார்த்தவுடன் ராஜா தனது குதிரையில் இறங்கி முனிவர் கண் திறப்பதற்க்காக காத்துக்கொண்டு இருந்தான்.

முனிவர் கண் திறந்தவுடன், ராஜா உங்களை தரிசிப்பதற்க்காகவே இங்கு காத்திருக்கிறேன் என்று கூறி தனது மனக்குறையை கூறினான். முனிவர் நீ ஏன் சாகவேண்டும் என்று நினைக்கிறாய் என்று கேட்டுவிட்டு மன்னரை கவனித்தார். மன்னருக்கு தனது காலை ஆட்டிக்கொண்டே இருக்கிற பழக்கம் கொண்டவர். முனிவரிடம் பேசும்போதும் தனது காலை ஆட்டிக்கொண்டே இருந்தார். முனிவர் தன்னை கவனிக்கிறார் என்பதை அறிந்த மன்னன் கால் ஆட்டுவதை நிறுத்திக்கொண்டான். 

முனிவர் மன்னனை பார்த்து கால் ஆட்டும் பழக்கம் உன்னில் எத்தனை நாட்களாக இருக்கிறது என்று கேட்க, மன்னர் நீணாட காலமாக இந்த பழக்கம் என்னில் இருக்கிறது என்று கூறினார். அதற்கு முனிவர், சரி இப்போது ஏன் கால் ஆட்டுவதை நிறுத்திக்கொண்டாய் என கேட்டார். நீங்கள் என்னை கவனித்து கொண்டு இருந்தீர்கள் அதனால் நான் எனது கால் ஆட்டுவதை நிறுத்திக்கொண்டேன் என்றார் மன்னன். 

முனிவர் உன்னிடம் பல வருடங்களா வழக்கங்களை நான் கவனிப்பதால் நிறுத்திக்கொண்டாய். உன்னுடைய மனநிம்மதியை கெடுக்கும் விசயம் என்ன என்பதை சற்று ஆழமாக சிந்தித்து பார், அதற்க்கான காரணம் என்ன என்பது விளங்கும். மனநிம்மதியை சீர்குழைக்கும் அந்த பழக்கத்தை கைவிடும் போது உன்னால் நிம்மதியான வாழ்கையை வாழ முடியும். இதை கேட்ட மன்னருக்கு இப்போது தான் புரிந்தது, நமது மனஉளைச்சலுக்கு காரணமான விசயத்தை கண்டறிந்து அதனை சரி செய்து விட்டால் நமக்கு மனநிம்மதி தானாக வந்துவிடும் என்பது. நம்மையே நாம் கவனிக்கும் போது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு கொள்ள முடியும் என்பதை உணர்ந்த மன்னன், முனிவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது நாட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்தான் மன்னன். 

நமது வாழ்கையிலும் இப்படிதான், பல சமயங்களில் தேவையற்ற விசயங்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்துக்கொண்டு மனநிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டு இருக்கிறோம். நமது மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவதற்க்கான தீர்வு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்து தேவையற்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துக்கொள்ளும் போது நமது வாழ்கை சுவை நிறைந்ததாக மாறும். 

பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻

             

No comments:

Post a Comment