Tuesday, April 30, 2024

பானி பூரி செய்வது எப்படி??

தேவையான பொருள்கள்:

ரெடிமேட் மினி பூரி - தேவைக்கேற்ப‌


புதினா ‍- ஒரு கைப்பிட


கறிவேப்பிலை ‍- ஒரு கைப்பிட


கொத்தமல்லி ‍- ஒரு கைப்பிடி


பச்சை மிளகாய் ‍- ஒன்று


சீரகம் - ஒரு தேக்கரண்டி


மிளகு - 5,


பூண்டு- ஒரு பல்


உருளை - 2


கொண்டைக்கடலை - சிறிது (தேவையெனில்)


வெங்காயம் - ஒன்று


மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி


மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


உப்பு - தேவைக்கேற்ப‌


செய்முறை:


🔥   புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.


🔥   அரைத்த விழுதுடன் தேவையான‌ தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.


🔥  இந்த தண்ணீர் நீர்க்க‌ இருக்க‌ வேண்டும்.


🔥  உருளை மற்றும் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


🔥  மினி பூரிகளை எடுத்துக் கொள்ளவும்.


🔥  உருளை, கொண்டைக்கடலை மற்றும் பொடியாக‌ நறுக்கிய‌ வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக‌ சேர்த்து நன்கு பிசையவும்.


🔥  விரும்பினால் கொத்தமல்லியும் சேர்க்கலாம்.


🔥  அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.


🔥  பூரிகளின் மேல் பகுதியில் சிறு ஓட்டை போட்டு அதனுள் சிறிது உருளை மசாலாவை வைக்கவும்.


🔥  சாப்பிடும் நேரத்தில் இதனுடன் அரைத்து வைத்துள்ள‌ புதினா கரைசலை ஊற்றி கொடுக்கவும்.

  சுவையான‌ பானி பூரி தயார்.

No comments:

Post a Comment