Tuesday, April 30, 2024

செய்தித் துளிகள்- 30.04.2024 (செவ்வாய்க்கிழமை)



மே 6 ம்தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.

👉மே 10 ம் தேதி 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்

-பள்ளிகல்விதுறை.

🍒🍒யுஜிசி-நெட் தேர்வுகள் ஜூன் 18-க்கு ஒத்திவைப்பு

16-ம் தேதி நடைபெற இருந்த யுஜிசி-நெட் தேர்வுகள் ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

🍒🍒தொடக்கப் பள்ளிகளில் 31.12.2022 அன்று வரை பணியில் சேர்ந்து பணிபுரித்து வரும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விவரம் வெளியீடு.

🍒🍒அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடங்கியது.

🍒🍒மே 5ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பப்பதிவு துவக்கம்

🍒🍒விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு.

🍒🍒தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகின்ற விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு.

🍒🍒அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு” - ராமதாஸ் குற்றச்சாட்டு.

🍒🍒1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' RTE ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.

🍒🍒தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை வட உள் தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீசும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

🍒🍒உதகையில் சிசிடிவி கேமிராக்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம், தேர்தல் அலுவலர் முன்னிலையில் முகவர்கள் ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டனர். 

🍒🍒இந்தியக் கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று பிரதமர் கூட தேர்வு செய்வோம் என உத்தவ் தாக்கரே கட்சி சார்ந்த சஞ்சய் ராவத் பேச்சு

🍒🍒ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்கா மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் - பாலஸ்தீன ஜனாதிபதி பேச்சு 

🍒🍒பாலஸ்தீன கொடியை தொங்கவிட்ட போராட்ட குழுவினர் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பரபரப்பு

🍒🍒எதிர்வரும் டி20 உலக கோப்பைக்காக கேன் வில்லியம்சன் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது நியூசிலாந்து

டெவன் கான்வே, டேரில் மிட்சல், ரச்சின் ரவீந்திரா, மிட்சல் சாண்ட்னர், டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்

🍒🍒2024 உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.

🍒🍒விபத்தில் இருந்து தப்பித்த அமித்ஷா:

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா கிளம்பிய ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு; பலத்த காற்று காரணமாக சமநிலையை இழந்த விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு.

🍒🍒சென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்!

👉கடந்த 2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தம்

👉ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம்

👉ஏற்கனவே மெட்ரோ ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

🍒🍒ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் - உயர் நீதிமன்றம் உத்தரவு:

ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு

இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

உள்ளூர் மக்களுக்கு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் - நீதிபதிகள்

🍒🍒தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது;

ஈரோடு - 108.68

திருப்பத்தூர் - 107.6

சேலம் - 106.88

வேலூர் - 106.7

கரூர் பரமத்தி - 105.8 

தருமபுரி - 104.9

திருச்சி - 104.54

மதுரை விமான நிலையம் - 104.36

திருத்தணி - 104.18 

மதுரை நகரம், தஞ்சாவூர் - 104

கோவை - 103.64

நாமக்கல் - 102.2 

பாளையங்கோட்டை - 101.3

மீனம்பாக்கம் - 100.4

🍒🍒தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டியும் திருவிழாவினை ஒட்டியும் 

மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவிப்பு

🍒🍒ஒலா டாக்ஸி நிறுவனத்தின் சி.இ.ஒ. ஹேமந்த் பஷி ராஜினாமா

பிரபல கார் டாக்ஸியான ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹேமந்த் பக்க்ஷி திடீர் ராஜினாமா செய்தார். ஓலா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக சேர்ந்த 3 மாதங்களிலேயே ஹேமந்த் பக்ஷி ராஜினாமா செய்துள்ளார். மறுகட்டமைப்புக்காக 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

🍒🍒பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மேகதாது பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது காவிரி ஆற்றில் குளித்தபோது ஹர்ஷிதா (20), அபிஷேக் (20), தேஜாஸ் (21), வர்ஷா (20), நேஹா (19) ஆகியோர் ஆற்றில் சுழலில் சிக்கி உயிரிழந்தனர்.

🍒🍒பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்"

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🍒🍒நடிகர் பிரகாஷ்ராஜூக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது! - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

சென்னையில் மே 25-ம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

🍒🍒விண்வெளி புறக்கோள்களில் உயிர்கள் இருக்கலாம் 

இஸ்ரோ தலைவர் தகவல்

🍒🍒சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,740க்கும், ஒரு சவரன் ரூ.53,920‬க்கும் விற்பனை

🍒🍒ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 9 பேர் மூச்சு திணறி பலி...வெள்ளியங்கிரி மலையில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹நோய் என்றால் என்ன?

மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது?

👉நமது ஆயுட்காலம் குறைவதற்கு இதுதான் காரணமா?

👉இந்த உடலானது நாம் உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது.

👉எனவே, நாம் உண்ணும் உணவு நல்ல உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல நீராக இருக்க வேண்டும்;

👉சுவாசிக்கும் காற்று நல்ல காற்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த உலகில் நாம் உடல் நலத்தோடு வாழமுடியும்.

👉ஆனால் நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையோடு நடந்துகொண்டாலும், சில சமயங்களில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ,

தவறான உணவுகளை உட்கொண்டு விடுகிறோம்.

👉அழுக்கான நீரைக் குடித்து விடுகிறோம்.

👉அசுத்தமான காற்றைச் சுவாசித்து விடுகிறோம்.

👉அப்பொழுது,

நாம் உண்ட உணவு, குடித்த நீர், சுவாசித்த காற்று இவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள் அனைத்தும் நம் உடம்பினுள்ளே போய்ப் படிந்து விடுகின்றன.

👉அவ்வாறு படிந்துவிட்ட நச்சுப் பொருள்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவற்றை வெளியேற்றுவதற்கு நாம் ஒன்றும் முயற்சி செய்வதும் இல்லை. எனினும், நம் உடம்பானது, தானாகவே அந்த முயற்சியைச் செய்கிறது.

🌹👉உடம்பு செய்யும் அந்த நன்முயற்சிக்குத்தான் நோய் என்று பெயர்

👉நாம் தவறான உணவுகளை உண்ணாமலும் அழுக்கான நீரைக் குடிக்காமலும், அசுத்தமான காற்றைச் சுவாசிக்காமலும், மிக மிக விழிப்போடு நடந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம்.                                           👉அப்போதுகூட, நமக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படியென்றால்,

👉நாம் எவ்வளவு நல்ல உணவை உண்டாலும், நாம் உண்ணும் உணவு முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

👉நாம் எவ்வளவு நல்ல தண்ணீரைக் குடித்தாலும் நாம் குடிக்கும் தண்ணீர் முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

👉நாம் எவ்வளவுதான் நல்ல காற்றைச் சுவாசித்தாலும், நாம் சுவாசிக்கும் காற்று முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

👉நாம் உண்ணும் உணவிலே, தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.

👉நாம் குடிக்கும் நீரிலே, தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.

👉நாம் சுவாசிக்கும் காற்றிலே தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.

👉 இந்தக் கழிபொருள்கள் தாம் நாம் வெளிவிடுகிற மூச்சுக் காற்றாகவும், வியர்வையாகவும், சிறுநீராகவும். மலமாகவும், நமது உடம்பினின்று வெளித் தள்ளப் படுகின்றன.

🌹👉எனவே, நம் உடம்பினுள்ளே இரண்டு வகையான இயக்கங்கள் இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.                                👉ஒன்று, உள்ளிழுக்கும் இயக்கம்.

👉மற்றொன்று, வெளித்தள்ளும் இயக்கம்.

👉 உள்ளிழுக்கும் இயக்கத்தை ஆங்கிலத்தில் (Assimilation) என்று சொல்லுவார்கள். வெளித்தள்ளும் இயக்கத்தை எலிமினேஷன் (Elimination) என்று சொல்லுவார்கள்.

👉இவ்விரண்டு இயக்கங்களும் சீராக நடைபெற்று வருமானால், நமக்கு நோயே வரமாட்டாது. நோயே மட்டுமன்று, நமக்கு மரணமேகூட வரமாட்டா.

👉இந்த இயக்கங்களில் சீர்கேடு ஏற்படும்போதுதான், நமக்கு நோய் தோன்றுகிறது. மரணமும் நேருகிறது! இவ்வியக்கங்களை நடத்தும் சக்திக்கே பிராணசக்தி (Life Force) என்று பெயர்.

No comments:

Post a Comment