Friday, April 26, 2024

செய்தித்துளிகள் 26.04.2024(வெள்ளிக்கிழமை)


*சிந்தனை துளிகள்*

நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருப்பது நேரமும் காலமும் மட்டுமல்ல பல மனிதர்களின் மனமும் குணமும் தான்.!

ஒருவர் நம்மை நம்பி ஒரு உண்மையை அல்லது  

தன் உணர்வுகளை சொல்கிறார் என்றால்...

அந்த இடத்தில் அவர் உங்களை தெய்வத்தை விட மேலாக மதிக்கிறார் என்று 

அர்த்தமாகும்.!!

அடுத்தவர் மீது பழிபோடுவது மிகவும் சுலபம் ஆனால் அதே பழியை  

நாம் சுமக்கும் போதுதான் அடுத்தவரின் வலி என்னவென்று நமக்குத் தெரியும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



*செய்தி துளிகள்*


 மாணவர்களுக்கு  சீருடை தைக்க SMC மூலம் தலைமையாசிரியர்கள் உள்ளூரில் தையல்காரர்களை நியமனம் செய்தல் சார்ந்து உறுப்பினர் செயலரின் கடிதம் வெளியீடு.

🍒🍒அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.

🍒🍒JEE மெயின் தேர்வு முடிவு வெளியீடு: நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை

🍒🍒90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் - TNPSC அறிவிப்பு

🍒🍒NILP   புதிய பாரத எழுத்தறிவு திட்டம் வருகிற கல்வி ஆண்டிற்கான (2024-25) கற்போர் மற்றும் தன்னார்வலர்களை கணக்கெடுக்க உத்தரவு இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு அமைத்தல், மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒பள்ளிக் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

🍒🍒அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வீடுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம்: ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்.

🍒🍒பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும்.

விதிகளை மீறி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.*

🍒🍒குறுகிய கால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

🍒🍒திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்

நித்யா (26) உதவி ஆட்சியராகவும், இந்திரா பிரியதர்ஷினி (28) வணிக வரித்துறையில் உதவி ஆணையராகவும், சுபாஷினி (26) கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகவும் தேர்வாகியுள்ளனர்.

🍒🍒Middle School HM to BEO Panel 2024 - Temporary Panel Published - Appointed Before 31.12.2011 - Director Proceedings வெளியீடு.

👉நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு.

🍒🍒உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு Summer Camp - SPD proceedings வெளியீடு.

🍒🍒MBA - போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் - UGC எச்சரிக்கை

🍒🍒NILP -  திட்டத்துக்கு கற்போர் , தன்னார்வலர்களைக் கண்டறிதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.                         🍒🍒விரைவில் Surplus கலந்தாய்வு - அறிவுரைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

👉தொடக்கக் கல்வித் துறையில் விரைவில் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு.

தொடக்கக்கல்வி துறையில் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236   இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு      30.04.2024 க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்க்கலாம்- தொடக்கக்கல்வி இயக்குனர்.

🍒🍒நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

🍒🍒அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான Brand Ambassador-ஆக தடகள வீரர் உசேன் போல்ட் நியமனம்.

🍒🍒தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், தி.மலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை.

🍒🍒சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸில் இணைய மன்சூர் அலிகான் கடிதம்:

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்ள கடிதம். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கடிதம் அளித்தார்.

🍒🍒முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஏப்.26 ஆம்  முதல் ஏப்.28 ஆம் தேதி  வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  - போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தகவல் 

🍒🍒தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

அதிகபட்சமாக வேலூரில் 108.68°F, ஈரோட்டில் 107.6°F, திருப்பத்தூரில் 106.52 6°F, சேலத்தில் 105.98°F, கரூரில் 105.8°F வெப்பநிலை பதிவு.

🍒🍒பசும்பாலிலும் பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை 

இந்நிலையில் கேரளாவை போல  தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க அதிகாரிகள்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் 

🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை! 

'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம்.

🍒🍒இனி 1/2 லிட்டர் தண்ணீர் தான்:

குடிநீர் வீணாவதை தடுக்க வந்தே பாரத் ரயிலில் இனி பயணிகளுக்கு 1 லிட்டருக்கு மாற்றாக 500ml தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். 

தேவையேற்படின் கூடுதலாக 500ml தண்ணீர் பாட்டில் விலையின்றி வாங்கி கொள்ளலாம்

இந்தியன் ரயில்வே அறிவிப்பு.

🍒🍒உம்ரா செல்ல விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

சவூதி மற்றும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க உம்ரா பயணிகள் கோரிக்கை

🍒🍒உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை  பட்டியலில் சேலம் அரசு கலைக் கல்லூரி இந்திய அளவில் 46வது இடம் தமிழக அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளது.

🍒🍒அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3ஆவது இடம்!..

மும்பை, டெல்லி முதல் இரு இடங்களை பிடித்துள்ளன

🍒🍒தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது

தங்கம் ஒரு கிராம் ரூ.6,710க்கும், ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்பனையாகிறது

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

👉நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது.  

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  இதில் 10,18,593 பேர் ஆண்கள், 13,63,216 பெண்கள்,  24 பேர் திருநங்கைகள். 

மேலும்,  தமிழ்நாட்டில் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மாநிலங்களின் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,39,125 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ  இணையதளத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள், நீட் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, தங்களது தேர்வு மையம் எந்த நகரத்தில் அமையவிருக்கிறது என்பதை உறுதி செய்து நகல் எடுத்துக்கொள்ளலாம்.

விரைவில், நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது.அதனையும் மாணவர்கள் நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு:

 நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை.

ஜேஇஇ மெயின் தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை(என்டிஏ) ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.

 2024 - 25 கல்வியாண்டில் சேர்வதற்காக இந்த தேர்வை கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தியது. 

13 மொழிகளில் நாடு முழுவதும் 319 நகரங்களில் நடத்தியது. வெளிநாட்டிலும் தேர்வு நடந்தது. 

முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வு முடிவினை என்டிஏ வெளியிட்டு உள்ளது.

இந்த தேர்வை எழுத 11,79,569 பேர் பதிவு செய்த நிலையில் 10,67,959 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

அவர்களில் 15 பேர் தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்த தலா 14 பேர் மற்றும் டில்லியைச் சேர்ந்த 6 பேர் அடங்குவர்.

டில்லியைச் சேர்ந்த ஷாய்னா சிங், மாதவ் பன்சால், தான்யா ஜா, இப்சிட் மிட்டல், பவேஷ் ராமகிருஷ்ணன் கார்த்திக் மற்றும் அர்ஷ் குப்தா ஆகியோர் நூறு மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்     

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

👉2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை  தெரிவித்துள்ளது. 

👉இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.

👉இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

👉இந்நிலையில் கோடை விடுமுறைக்கு முன்னரே  அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

👉இந்நிலையில் நேற்று வரை 3,24,884 மாணவர்கள் அரசுபள்ளியில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,793 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

👉குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில்1,741 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.

👉தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment