Saturday, April 13, 2024

செய்தித் துளிகள் - 13.04.2024(சனிக்கிழமை)


பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள், ஊழியர்களிடம் பிடித்த டி.டி.எஸ்., வரியை உரிய கணக்கில் சேர்க்காத 5,563 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ்.


📘📕

*2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணைப்படி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் 6.5.2024 அன்று வெளியாகும். அன்று tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.*

📘📕174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்கள் தமிழில் மொழியாக்கம்: சென்னை ஐஐடி தகவல்

📘📕வரும் கல்வியாண்டு முதல் 6,9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் சோதனை முறையில் தேசிய மதிப்பெண் கட்டமைப்பு (என்சிஆா்எஃப்) நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது

📘📕தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக 14.04.2024 அன்று வினாடிவினா நிகழ்ச்சி - செய்தி வெளியீடு.

📘📕அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் ஏப்.16 - 30 வரை நடத்திட வழிமுறைகள் வெளியீடு.                                                               📘📕சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்.

📘📕

*தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நேற்று  தொடங்கியது.88 மையங்களில் சுமார் 50,000 ஆசிரியர்கள் இதில் ஈடுபட உள்ளனர்.தேர்வு முடிவுகள் வரும் மே 10ம் தேதி வெளியாக உள்ளன.*


📘📕வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா எச்சரிக்கை.

📘📕ஏப்.16-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை: 

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஏப்.16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் 

விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜூன் 8ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும் என அறிவிப்பு.

📘📕

22.04.2024 மற்றும் 23.04.2024 ஆகிய ‌நாட்களில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும். 

👉24.04.2024 முதல் 4 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை.

👉ஆசிரியர்களுக்கு 24.04.2024-புதன்

25.04.2024-வியாழன்

26.04.2024-வெள்ளி வரை பள்ளி உண்டு.

👉Last working day 26.04.2024.

📘📕வறுமையில் உள்ள குடும்ப பெண் தலைவிகளுக்கு மாதம் 8,500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்!

அவர்களுக்கு வறுமை விட்டுப் போகும் வரை அந்த நிதி தொடர்ந்து வழங்கப்படும்

-கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு.

📘📕உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா நேற்று தொடக்கம்; வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி வைகையில் இறங்குகிறார் அழகர்

📘📕பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

📘📕தமிழ்நாட்டின் களம் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

📘📕கட்டுமான பணிக்காக இந்தியாவில் இருந்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் வரவுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

📘📕எல்லை பிரச்சனை - பிரதமர் கருத்துக்கு சீனா பதில்:

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி கூறியதன் எதிரொலி; இருதரப்பு உறவுகளை நல்ல மற்றும் நிலையான பாதையில் கொண்டு செல்ல, தங்களுடன் இந்தியாவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் என நம்புவதாக சீனா பதில்

📘📕நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ரூ. 305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது

-சத்யபிரதா சாகு

📘📕இன்றுக்குள் பூத் சிலிப் விநியோகம்

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு  பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது

இன்றுக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் 

-சத்யபிரதா சாகு

📘📕தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலை தொடங்குகிறார் மஸ்க்?

மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சியை எடுக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி.

மின்சார கார் ஆலையை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த விரைவில் இந்தியா வருகிறார் மஸ்க். "தமிழ்நாட்டில் மின்சார கார் தயாரிப்புக்கு இசைவான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.

-டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சர்

📘📕I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வேண்டுமா என்பதை அந்தந்த மாநிலமே முடிவு செய்யலாம் 

-ராகுல் காந்தி

📘📕நாட்டின் இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்: கோவையில் ராகுல் காந்தி பேச்சு

📘📕எனது மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலின். வேறு எந்த அரசியல் தலைவர்களையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை

கோவையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேச்சு

📘📕தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள்'

``தமிழர்களுக்கு யாரை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும்'' 

ராகுல் காந்தி

📘📕சமூக நீதியைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும்

ராகுல் காந்தி பேச்சு

📘📕ராகுல் காந்தியே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என அழைக்கிறேன்

 மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள் என்ற அண்ணாவின் சொல்லின் வழியே அவர் மக்களுடன் நடந்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார்

சமூக நீதியின் அம்சங்கள் கொண்ட அந்த தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் கதாநாயகன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு                                                             📘📕இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் நம்பிக்கை நாயகன், Dear Brother என் அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்களை வரவேற்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை தொடங்கினார்.

📘📕கடந்த பத்தாண்டுகளில் பாஜக  பயனுள்ள திட்டங்கள் கொண்டுவரவில்லை

இந்திய வருவாயை பெருக்குகிற மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது;

ஆனால் தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வை திருப்பி அளிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது”

சீமான்

📘📕“தமிழகத்திற்கு வருவதை மிகவும் விரும்புகிறேன்''

``தமிழகத்தின் கலாச்சாரம், மொழி, வரலாறு உள்ளிட்டவை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளன''

``தமிழகம் இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது''

நெல்லையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு

📘📕கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை.

அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளது.

எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

📘📕"காஷ்மீர் மீண்டும் மாநில அந்தஸ்தை பெறும்"

ஜம்மு காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்தை மீண்டும் பெறும் 

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

"பல தசாப்தங்களுக்கு பிறகு காஷ்மீரில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் முதல்முறையாக தேர்தல் நடைபெற உள்ளது"

"ஜம்மு காஷ்மீரின் சூழல் முற்றிலும் மாறிவிட்டது - வளர்ச்சி அடைந்ததோடு நம்பிக்கை அதிகரித்து விட்டது"

"மக்கள் தங்கள் கனவுகளை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உடன் நிச்சயம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரும்"

காஷ்மீரில் பிரதமர் மோடி பிரச்சாரம்

📘📕சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

தங்கம் ஒரு கிராம் ரூ.6,805-க்கும், சவரன் ரூ.54,440-க்கும் விற்பனையாகிறது

📘📕மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என எதற்கும் பயப்படாதவன் இந்த விவசாயி எடப்பாடி பழனிசாமி

இபிஎஸ் பேச்சு.

No comments:

Post a Comment