Saturday, April 13, 2024

அவல் சர்க்கரை பொங்கல் செய்யும் முறை

 *சமையல் குறிப்புகளில் இன்று அவல் சர்க்கரை பொங்கல் செய்யும் முறையை பார்ப்போம் வாருங்கள்...!*


*அவல் சர்க்கரை பொங்கல்:*


*தேவையான பொருட்கள்:*


கெட்டி  அவல் - 1 கப்

பாகு வெல்லம் - 1 கப்

நெய் - 4 டேபிள்ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 8

உலர்ந்த திராட்சை - 5

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன் 


*செய்முறை:*


1. கனமான கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு  முந்திரிப்பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். முந்திரி நிறம் மாறும் போது  கெட்டி அவலையும் சேர்த்து‌ மிதமான சூட்டில் வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.


2. கடாயில் 2.5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர்  கொதித்ததும் வறுத்த அவலை முந்திரி திராட்சையோடு சேர்த்து மூடிவைத்து வேகவைக்கவும். 


3. மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி தட்டிய பாகு வெல்லத்தை சேர்த்து அவை கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். 


4. அவல் நன்றாக வெந்ததும்  வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு மிதமான சூட்டில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். அவை கெட்டியாக மாறும் போது ஏலக்காய்த்தூள் மற்றும் மீதமுள்ள நெய்யையும் சேர்த்து திரண்டு ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். தித்திக்கும் அவல் சர்க்கரை பொங்கல் தயார்.

No comments:

Post a Comment