Saturday, April 13, 2024

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(13-ஏப்)

*பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.*


🌟 பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் பிறந்தார்.


🌟 இவர் சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். கருத்தும், கற்பனையும் நிறைந்த இவரது பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது.


🌟 இவர் தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம். படித்த பெண் திரைப்படத்துக்காக 1955ஆம் ஆண்டு முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை பதித்தார்.


🌟 சின்னப் பயலே சின்னப் பயலே, தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய குறிப்பிடத்தக்க, காலத்தால் அழியாத பாடல்களை வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.



*எம்.ஆர்.எம்.சுந்தரம்.*


👉 செய்திகள் வாசிப்பது எம்.ஆர்.எம்.சுந்தரம் என்ற குரலுக்கு சொந்தக்காரரான மே.ரா.மீ.சுந்தரம் 1913ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில் பிறந்தார்.


👉பின்னர் 1976ஆம் ஆண்டு கல்கி நிறுவனர் ரா.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை 'பொன்னியின் புதல்வர்' என்ற பெயரில் கல்கி இதழில் 4 ஆண்டுகளாக எழுதினார். இது நூலாக 912 பக்கங்களில் வெளிவந்தது.


👉 இது தவிர 'இதய மலர்கள்' என்ற கவிதைத் தொகுப்பும், 'கருநீலக் கண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவர் நவம்பர் 11ஆம் தேதி 1995ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Post a Comment