Saturday, September 16, 2023

பொறியாளர் தின வரலாற்று திருமகன்

இந்தியா பிரிட்டன் அரசின் நேரடி நிர்வாகத்துக்கு வந்த 3ம் ஆண்டில் அதாவது 1860ல் மைசூர் பக்கம் ஒரு பிராமண குடும்பத்தில் என அக்குழந்தை பிறந்தது, அது ஆந்திர தெலுங்கு வம்சம், அந்த குழந்தையின் தந்தையின் முன்னோர்கள் அங்கிருந்து மைசூருக்கு குடியேறிய சமஸ்கிருத பண்டிதர்கள்


மோக்சகுண்டம் எனும் தன் ஊர் பெயரை தன்னோடு சுமந்து வந்த குலம் அது


அக்குழந்தைக்கு படிப்பு இயல்பாக வந்தது, படிப்பில் மட்டுமே வளர்ந்து பருவமாகி 15ம் வயதிலே அவன் சிறந்த மாணவனாக உருவானான், அப்பொழுது அவன் தந்தை மறைந்தார் எனினும் போராடி தன் 21ம் வயதில் சென்னை பல்கலைகழகத்தில் 1881ம் ஆண்டு பட்டம் வாங்கி பின் புனேவில் கட்டடம் கட்டும் படிப்பில் டிப்ளமோ முடித்தார்


1885ம் ஆண்டு முதல் அவரின் அசுர பணி தொடங்கிற்று


அது பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி காலத்தில் சில கட்டங்கள் பாலங்கள் இன்னும் பல எழும்பிய காலம் என்பதால் பிரிட்டிசார்  அவரை பொதுபணிதுறையில் சேர்த்துகொண்டான், மகராஷ்ட்ரா நாசிக்கில் இருந்து அவரின் பணி தொடங்கிற்று


அங்கிருந்து பின் சிந்துநதிகரை பகுதிக்கு அனுப்பட்டார் , 1894 வரை அங்குதான் பணியாற்றினார், பின் சூரத்துக்கு மாற்றபடார்


அவரின் அபார அறிவும் பெரும் திறமையும் பதவி உயர்வுகளை கொடுத்து கொண்டே இருந்தன, அப்பொழுதே சில பயிற்சிக்காக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் அரசால் அனுப்பட்டிருந்தார்


1898ல் ஜப்பானிய பாசன முறைகளை அறிந்துவந்து பல வசதிகளை செய்ய்தொடங்கினார்


பின் பிரிட்டிசார் அவரை பாசன வசதிகள் செய்யும் குழுவில் பிரதான இடமளித்து உயர்த்தினான், எகிப்து முதலான தேசங்களுக்கு சென்றுவந்து ஆற்றில் அணைகட்டுதல் உள்ளிட்ட பல விஷயங்களை அனுபவமாக பெற்றுவந்தார்


அவரின் அளப்பறிய சாதனை தானியங்கி மதகுகளை 1903ம் ஆண்டே வடிவமைத்தது, ஆற்று வெள்ளத்துக்கு ஏற்ப தானே இயங்கும் மதகுகளை அவர் வடிவமைத்தபொழுது உலகம் அவரை கொண்டாடிற்று, உலகின் அணைகளில்லாம் அந்த மாற்றம் வந்தது


மறுபடி அமெரிக்கா, கனடா, ரஷ்யா ஐரோப்பா என எங்கெல்லாமோ சென்று நவீன அணைகளுக்கும் பாசனங்களுக்கும்  உதவினார்


அன்று சுல்தானியமாக இருந்த ஐதரபாத் நிஜாம் அவரை பெரும் முயற்சிக்கு பின் அழைத்துவந்து தன் பகுதியின் முன்சி ஆற்றின் வெள்ளபெருக்கை கட்டுபடுத்தும் திட்டத்தை கோரினான், அதை திறம்பட முடித்து கொடுத்தார் அவர்


1908ல் பெரும் மரியாதையுடன் பிரிட்டிஷ் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் அந்த விஸ்வேஸ்வரய்யர், அப்படியே சொந்த ஊருக்கும் வந்தார்


அவரை மைசூர் சமஸ்தானஸ்தின் திவானாக 1909ம் ஆண்டு சேர்ந்தார், அப்பொழுது நான்காம் கிருஷ்ணாராஜ உடையார் மைசூர் மன்னராக இருந்தார்


மைசூர் சமஸ்தானம் முன்பு நாயக்கர் காலத்தில் விஜயநகர அரசில் இருந்தது பின் நாயக்கர்கள் பலமிழந்தபொழுது பிஜப்பூர் சுல்தானிய கட்டுபாட்டில் இருந்தது, வீரசிவாஜி காலத்தில் நாயக்கர்கள் தலையெடுத்தனர்


சிவாஜி அவர்களை தலைநிமிர வைத்தான், அவன் காலத்தில் தமிழக கோவை திண்டுக்கல் வரை மைசூர் சமஸ்தானம் இருந்தது


ஆனால் பின்பு ஹைதர் அலி அதனை கைபற்றியிருந்தான் பின் அவன் மகன் திப்பு அந்த சுல்தானியத்தை பழைய பிஜப்பூர் சமஸ்தானம் போல விஸ்தரிக்க எண்ணி போர்கள் பல புரிந்தான் எனினும் பிரிட்டிஷார் அவனை முறியடித்து உடையார்களை பதவியில் அமர்த்தினர்


அந்த நான்காம் உடையாரிடம்தான் திவானாக 1909ல் வந்தார் விஸ்வேஸ்ரய்யர்


அப்பொழுது ஒரு விசித்திரமான சிக்கல் மைசூர் சமஸ்தானத்துக்கு இருந்தது, அது ஹைதர் அலி காலத்தில் தஞ்சை மராட்டியருக்கும் மைசூருக்கும் ஏற்பட்ட முரண்பாடு என்கின்றது வரலாறு


அதாவது காவேரியில் வெள்ளம் வந்து தஞ்சாவூர் பக்கம் பாதிப்பை ஏற்படுத்தினால் முன் கூட்டியே அறிவிக்கவில்லை இன்னும் முறையாக தடுக்கவில்லை என தஞ்சை சமஸ்தானம் மைசூரிடம் இருந்து நஷ்ட ஈட்டை கோரியது


திப்பு அப்படி தரமுடியாது என காவேரியின் மடைகளை அடித்து உடைத்த காலமும் இருந்தது


அது உடையார் காலத்திலும் தொடர்ந்தது பல்லாயிரம் பணம் இப்படி நஷ்ட ஈடாக வழங்கபட்டுகொண்டிருந்தது


விஸ்வேஸ்ரய்யர் அந்த பணத்தை முதலீட்டாக கொண்டு ஒரு அணைகட்டிவிட்டால் பின் வெள்ள சிக்கல் வராது நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டாம் என பெரும் திட்டத்தை முன்வைத்தார்


அதுவரை மைசூரில் காவேரிக்கு குறுக்கே பெரும் அணை இல்லை, சிறிய வகை கால்வாய்களும் பாசனங்களும் இருந்தன‌


பெங்களூர் அப்பொழுது ஒரு கிராமம் அளவுக்குத்தான் இருந்தது


அப்பொழுது 81 லட்சம் செலவில் அணைகட்ட தீர்மானிக்கபட்டது, அது பெரும் தொகைதான் ஆனாலும் தீர்க்கதரியான விஸ்வேஸ்வரய்யா அணையில் மின்சாரம் தயாரித்து விற்பது, பெரும் தோட்டமும் நகரமும் உருவாக்கி அந்த பணத்தை ஈடுகட்டுவது என திட்டம் தயாரித்தார்


அவரின் பெரும் அனுபவமும்  உலகளாவிய பெரும் அறிவும் அதற்கு கைகொடுத்தன‌


பின் ஆங்கில அரசிடம் அனுமதிகோரபட்டது அவர்கள் அனுமதி கொடுத்தார்கள், விஸ்வேஸ்வரய்யா அணை கட்ட தொடங்கினார்


கண்ணம்பாடி எனும் இடத்தில் ஏமாவதி லட்சுமணதீர்த்தம் எனும் இரு நதிகள் காவேரியோடு சேருமிடத்தில் அணையினை எழுப்பினார்


46 தானியங்கி மதகுகளுடன் அதிசயம் போல அந்த அணையினை கட்டிமுடித்தார், அப்படியே அழகான பிருந்தாவனமும் உருவாக்கினார்


மைசூர் மெல்ல செழிக்க ஆரம்பித்தது, காவேரியின் டெல்டாவில் விளைந்த நெல்லை மைசூரை ஒட்டியே டன் கணக்கில் விளையவைத்து அசத்தினார் விஸ்வேரய்யர்


அந்த அணை அந்த உடையார் பெயரில் "கிருஷ்ண ராஜ சாகரம்" என எழும்பியதுதான் கன்னடம் இன்று எழும்பி நிற்பதன் முதல்படி


அந்த அணையின் பலத்தில்தான் அதன் ஆதாரத்தில்தான் பெங்களூர் எனும் கிராமம் மெல்ல மெல்ல நகரமானது, அந்த நகரின் பிரதான கட்டடமான "விதான் சவுதா" விஸ்வேரய்யாவால் வடிவமைக்கபட்டது


இந்த அணை கொடுத்த நீர்வளமே பெங்களூர் எனும் சிறிய கிராமத்தை உலகின் முன்னணி நகரமாக இன்று மாற்றி வைத்திருக்கின்றது


தொடர்ந்து பெரும் திட்டங்களை கொடுத்தார் அய்யர், இன்று சிறிதும் பெரிதுமாக இருக்கும் கன்னட அணைகள் சுமார் 28ம் அவர் கொடுத்த வழிகளே


அதே நேரம் மேட்டூர் அணைகட்டபடும் பொழுதும் பெரும் பங்களிப்பை செய்தார் விஸ்வேரய்யர்


தன் ஓய்வு காலத்திலும் நாடெங்கும் ஓடி ஓடி உழைத்து கொண்டிருந்தார், ஒரு கட்டட நிபுணராக தொழிற்சாலைகளை நிர்மானிப்பதில் பெரும் பங்குவகித்தார்


ரூர்கேலா போன்ற பெரும் இரும்பு ஆலைகள் உருவாக காரணமானார், இன்னும் எவ்வளவோ பெரும் அணைகளும் பாலமும் ஆலையும் எழும்ப காரணமானார்


இந்தியாவின் கல்வி நிலையங்களில் கட்டட பொறியியல் அவரால் எழும்பிற்று, கல்வி நிலையம் பல திறக்க உதவினார், அவர் பெயரில் ஏகபட்ட கல்வி நிறுவணங்களும் திறக்கபட்டன‌


அப்துல்கலாமுக்கு முன்பு பெரும் அடையாளமாக விஞ்ஞான கல்விக்கு அவர்தான் வலம் வந்தார்


சுதந்திர இந்தியாவிலும் அவரின் பங்களிப்பு பிரமாதமாக இருந்தது, 1955ல் அவருக்கு பாரத ரத்னா வழங்கபட்டது


101 வயதுவரை பெரும் வாழ்வு வாழ்ந்த அவர் 1962 வரை இந்தியாவின் எல்லா அணைகளுக்கும் திட்டமிட்டு கொடுத்தார், கல்வி நிலையங்களை வழிநடத்தினார்


மைசூர் கிருஷ்ணராஜ சாகரில் தொடங்கிய அவரின் அணைகட்டும் முயற்சி பக்ரா நங்கல் முதல் எவ்வளவோ அணைகள் வர காரணமானது


இந்தியாவின் முதல் பொறியாளரான அவர் பெயரில்தான் இந்தியாவில் "பொறியாளர் தினம்" கொண்டாடபடுகின்றது


ஆம், இன்று இந்தியாவில் பொறியாளர் நாள்


இந்தியா இன்று கண்டிருக்கும் விவசாய தன்னிறைவுக்கும், தொழில்புரட்சிக்கு அடிப்படையான நீர் வசதிக்கும், மின்சார உற்பத்திக்கும் மூலம் அவர்தான்


அவரின் திட்டங்கள்தான் இந்திய ஆற்ற்பாசான அணைகள் மூலம் இந்தியாவினை அடுத்தகட்டத்துக்கு இழுத்து சென்றது, இந்தியாவின் இன்றைய வளர்ச்சி அவரால்தான் அடிதளமிட்டது


"கன்னட சிற்பி" என அழைக்கபடும் அளவு அவரால் கன்னட மகாணம் பெரும் வாழ்வு பெற்றது


இன்று மாண்டியா பக்கமும் கன்னட பக்கமும் விவசாயம் கொழிக்கின்றது என்றால், பெங்களூர் எனும் பெருநகரம் உலக அளவில் கவனிக்கபடுகின்றது என்றால் அதன் மூல காரணம் அந்த விஸ்வேரய்யர்

அவரை இந்திய தேசமும் கன்னட மக்களும் நன்றியோடு வணங்கி கொண்டிருக்கின்றார்கள்


தமிழகம் வழக்கம்போல் நழுவுகின்றது, இன்று பொறியாளர் தினம் எனும் பரபரப்பு கூட தமிழகத்தில் இல்லை, காரணம் அவர் ஒரு அய்யர், இந்து பிராமணன் அதுவும் சமஸ்கிருதம் கற்ற வேதம் ஓதிய பிராமணன்


தேசாபிமானிகள் தமிழக‌ மேட்டூர் அணைமுதல் பல அணைகள் கட்ட காரணமான அந்த மூல விஞ்ஞானிக்கு நன்றி செலுத்தி கொண்டிருக்கும் நேரமிது


பிராமண வெறுப்பு தமிழகத்தில் அரசியலானது


இங்கு 1909களில் நீதிகட்சி பிராமண வெறுப்பு பேசியபொழுது தொடங்கியது தமிழக வீழ்ச்சி

அதே 1909களில் ஒரு பிராமணனை அரவணைத்து அவன் வழிகாட்டலில் எழுந்தது கன்னட எழுச்சி


ஆம், பிராமணனை ஆதரித்த மாகாணம் எழுந்து வளர்ந்து வாழ்வு பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதும், பிராமண எதிர்ப்பை அரசியலாக்கிய தமிழகம் வீழ்ந்து கொண்டிருப்பதும் காலத்தின் சாட்சிகள்..


ஒரு அறிவார்ந்த பிராமணன் உருவாக்கிய கன்னடம் இன்று நிமிர்ந்து நிற்கின்றது அவன் காட்டிய வழியில் அணையும் விளை நிலங்களும் ஆலைகளுமாக பிரமாண்டமாக எழும்பி நிற்கின்றது


பிராமணை பழித்து உருவான தமிழக அரசியல் இன்று எப்படியாயிற்று கூவம் முதல் எல்லா நதிகளும் என்னாயிற்று என கண்டால் எல்லோருக்கும் புரியும்


அறிவும் திறமையும் இருப்பவன் யாராக இருந்தாலும் அவனை கொண்டாடும் இனம் வாழும் மாறாக வீண் பழியும் குழப்பமான சுயநல அரசியலும் செய்து அதில் அறிவுடையோர்களை விரட்டி அடித்தால் அந்த இனம் வீழும்


விஸ்வேஸரய்யா என்பவருக்கு தேசம் பெரும் அஞ்சலி செலுத்துகின்றது, கன்னட மக்கள் கூடுதலாக வணங்கிகொண்டிருக்கின்றார்கள்


அதே நேரம் இந்திய தமிழகத்தில் அண்ணாதுரை என முன்னாள் முதல்வர் ஒருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடுகின்றார்கள்


இந்த இருவரில் யார் புகழ் நிலைத்தது, இன்னும் நிலைத்து நிற்கும் என்றால் சந்தேகமே இல்லாமல் விஸ்வேஸ்ர அய்யர் புகழ்தான்.

No comments:

Post a Comment