Sunday, September 10, 2023

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-2

மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.

---

லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழுங்கள்

---

வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.

---

மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில்.

---

* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.

---

* கீழ்த்தரமான தந்திர முறைகளால் இந்த உலகத்தில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.

------

அதிர்ஷ்டதேவதை உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையில் இருந்து அணுவளவும் பிறழ்ந்து போகாமல் இருப்பதில் கவனமாக இரு.

---

வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.

No comments:

Post a Comment