Thursday, May 23, 2024

சங்கீலை(அ)முட்சங்கஞ்செடி - தினம் ஒரு மூலிகை


*சங்கீலை(அ)முட்சங்கஞ்செடி*.   பளபளப்பான எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் நீண்ட முட்களையும் வெண்மையான உருண்டை வடிவ உண்ணக்கூடிய பழங்களை உடைய குறும் செடி புதர் காடுகளிலும் ஆற்றங்கரையிலும் வளரும் இலை வேர் பால் பழம் மருத்துவ பயன் உடையது சிறுநீர் பெருக்கி ஆகவும் இலை உடல் பலம் பெருக்கியாகவும் வேர் கோழை அகற்றி இருமல் தணிக்கும் மருந்தாக செயல்படும் சங்கீலை தூதுவேளை இரண்டும் ஒரு பிடி அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் உட்கொள்ள கபரோகம் தீரும் சங்கிலை வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காய் அளவு காய்ச்சி ஆரிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வர கற்பாயச அழுக்குகள் வெளியேறி ஜன்னி இழுப்பு வராமல் தடுக்கும் சங்கிலை வேர்பட்டை சம அளவு அரைத்து சுண்டைக்காய் அளவு வெந்நீரில் காலை மாலை உட்கொள்ள இருபது நாட்களில் ஆரம்ப பாரிசவாதம் வாய்வு குடைச்சல் பக்கவாதம் தீரும் சங்கிலை வேம்பு குப்பைமேனி நொச்சி நாயுருவி ஆகியவற்றில் வேது பிடிக்க வாத வீக்கம் வலி நீரேற்றம் கீழ்வாயு தீரும் வேர் பட்டைச் சாறு 20 மில்லி 100 மில்லி வெள்ளாட்டு பாலில் கலந்து குடித்து வர சிறுநீர் தடை நீங்கும்.

நன்றி.

No comments:

Post a Comment